• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 14:42:15    
மதியழகன்

cri

வணக்கம், அன்புள்ள நேயர்களே.
2008ம் ஆண்டு நிறைவடைந்து விட்டது. 2009 புதிய ஆண்டை வரவேற்கும் போது, உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தேன் மொழியும் நானும் இணைந்து கூட்டாக தயாரித்த சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியில், நீங்கள் எப்போதும் கவனம் செலுத்தி வருவதற்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்நிகழ்ச்சி அறிவிப்பில் பணி புரிவதில், மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். அத்துடன், நேயர்கள் அனுப்பிய கடிதங்களையும் நான் பெற்றுக் கொண்டேன். அக்கடிதங்களில், சீன வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சி தயாரிப்பது பற்றி தெரிவிக்கப்பட்ட சில முன்மொழிவுகள் நிகழ்ச்சிக்கு நன்மை பயப்பதாக இருந்தன. நீங்கள் தொடர்ந்து வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியை கேட்டு, கருத்துக்கள் தெரிவிக்க வேண்டுமென விரும்புகிறேன். மேலும் சிறந்த நிகழ்ச்சிகளை வழங்க, நான் தமிழ் மொழியை மேலும் ஆழமாக கற்றுக் கொள்வேன்.


தவிர, சிச்சுவான் மாநிலத்தின் வென்சுவான் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், நீங்கள் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெற்ற போது, எமது நிகழ்ச்சிகளில் நீங்கள் அதிக கவனம் செலுத்தி கருத்துகள் அனுப்பினீர்கள். அதற்காகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். தடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம், உங்கள் தரமான முன்மொழிவுகளை எழுதி அனுப்பி, நிகழ்ச்சியின் தரம் உயர நீங்கள் உதவுவதை மிகவும் வரவேற்கிறேன்.தற்போது, சீனாவில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேலதிக நேயர் நண்பர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
அனைவரும் நீண்டகாலம் செய்து வருகின்ற, சீன வானொலி தமிழ் பிரிவின் ஒலிப்பரப்பு பணிக்கு உங்களது ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.


புத்தாண்டில் நாள்தோறும் நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்க.வளர்க
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி, வணக்கம்.