• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 14:42:15    
தேன் மொழி

cri

அன்புள்ள நேயர்களே, உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! நான் தேன் மொழி.

2008ம் ஆண்டில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது. பல நாடுகளின் விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் தங்களது திறமைகளை முழுமையாக வெளிக்கொணர்த்து, பல சிறந்த சாதனைகளை படைத்தனர். 10 மீட்டர் ஆடவர் குழல் துப்பாக்கி சுடும் போட்டியில், இந்திய விளையாட்டு வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

தவிர, என் பணி பற்றி கூறுகையில், சென்ற ஓராண்டில், சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சிக்கு மதியழகனுடன் இணைந்து, பொறுப்பேற்றேன். இந்த நிகழ்ச்சி, ராணுவம், பண்பாடு, பொருளாதாரம், அரசியல் முதலிய துறைகளில், சீன வரலாற்றிலான முக்கிய நிகழ்ச்சிகளை நேயர்களுக்கு விபரமாக எடுத்துக்கூறுகிறது. சீனாவின் நீண்டகால வரலாற்றையும், ஒளிமயமான பண்பாட்டையும் நேயர்கள் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். சீனாவின் பல முக்கிய பிரமுகர்கள் பற்றிய கதைகளையும் இந்நிகழ்ச்சியில் கேட்டறிய முடியும். எடுத்துக்காட்டாக, இவ்வாண்டு, சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை மேற்கொள்ளப்பட்ட 30வது ஆண்டாகும். கடந்த 30 ஆண்டுகளில் சீனாவில் மாபெரும் மாற்றங்கள் காணப்பட்டன. இதை முன்னிட்டு, இந்த 30 ஆண்டுகளில் சீனாவில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள் பற்றி அண்மையில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றோம். நேயர்கள் இதை விரும்புவார்கள் என்பது என் நம்பிக்கை. மேலும், இந்த நிகழ்ச்சிக்கான நேயர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

அடுத்த ஆண்டு, நேயர்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தை செழிப்பாக்கவும், நேயர்கள் விரும்பும் நிகழ்ச்சியா இதை மாற்றவும், மின்னஞ்சல் முதலிய வழிமுறைகள் மூலம் மதிப்புள்ள ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் நீங்கள் முன்வைக்க வேண்டும் என்றும் விரும்புகின்றேன்.

புத்தாண்டில், நான் மேலும் பாடுபட்டு உழைப்பேன். சீன வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து நேயர்கள் ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றேன். 2009ம் ஆண்டில் நீங்கள் உடல் நலத்துடன் வாழவும், பணிகளை தங்கு தடையின்றி நடத்தி முடிக்கவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன். வணக்கம் நேயர் நண்பர்களே.