• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 12:32:27    
சீதா

cri
அன்பு நண்பர்களே வணக்கம். நான் சீதா. மீண்டும் ஓர் ஆண்டு விரைந்தோடிவிட்டது. 2008ம் ஆண்டில் சிச்சுவான் நிலநடுக்கம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், நிதி நெருக்கடி முதலியவை நிகழ்ந்தன. வேதனை என்றாலும் சரி, மகிழ்ச்சி என்றாலும் சரி, இவையனைத்துமே வரலாற்று நிகழ்வுகளாக பதிவாகியுள்ளன. இனிய புதிய எதிர்காலத்தை நோக்கி நாம் பயணிக்கின்றோம். பழையதை விட்டு புதியதை வரவேற்கும் அருமையான இந்தத் தருணத்தில் உங்களுக்கு இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவி்த்து கொள்கிறேன்.
இவ்வாண்டில், நான் நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்குப் பொறுபேற்று வருகிறேன்.
நன்கு அறிமுகமான இந்த இசையைக் கேட்டு, என்னை உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?இதைக் அறிந்த புதிதில், எனக்கு நண்பர்கள் அனைவரையும் நினைவிருக்கிறது. இவ்வாண்டு, பல நேயர்கள் கடிதங்கள் மூலம், தாம் விரும்பும் பாடல்களை ஒலிபரப்புமாறு கேட்டுக்கொண்டனர். நேயர்களின் விருப்பங்களை நான் இயன்ற வரை உடனுக்குடன் நிறைவு செய்தேன். நேயர் விருப்பம் நிகழ்ச்சியை நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பது என் நம்பிக்கை.
நேயர் விருப்பம் நிகழ்ச்சி மீதான உங்களது உற்சாகத்திற்கும், நீங்கள் எனக்களிக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். மகிழ்ச்சியையும் இன்பத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதை, எனது பெரும் பேறாக கருதுகிறேன்.
இனி விரும்பும் எந்த பாடல்களைக் கேட்க விரும்பினாலும், நீங்கள் எனக்கு கடிதங்கள் மூலமோ மின்னஞ்சல் மூலமோ எழுதியனுப்பலாம். உங்களுக்கு மிகச் சிறந்த நிகழ்ச்சிகளைத் தயாரிக்க என்னால் இயன்றது அனைத்தையும் செய்வேன் என உறுதி கூறுகிறேன்.
இனிமையான பாடல்கள் மூலம், சீன வானொலி தமிழ் பிரிவின் சார்பில் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க நான் விரும்புகிறேன்.
இறுதியில், அனைவரும் அமைதியோடும் வளமுடனும் வாழ உளமார வாழ்த்துகின்றேன்.
புத்தாண்டில் அனைவரும், விருப்பங்கள் நனவாக்கப்பட்டு, மென்மேலும் அழகாக வளர்ந்து, நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன். வணக்கம் நேயர்களே.