• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 12:33:06    
ஈஸ்வரி

cri

அன்புள்ள நேயர்களே, எமது இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பல வெற்றிகளும் வளங்களும் பெற்று, பெருமகிழ்ச்சியோடு வாழ என் வாழ்த்துக்கள்.
மக்கள் சீனம் நிகழ்ச்சியின் துவக்க இசை மற்றும் .......

சீனாவிலுள்ள வெளிநாட்டவர்கள், யாங் சி ஆற்றின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஒலிம்பிக் தீபம் ஏந்தியவர்கள், தலைகீழாக மாறிய சீன கிராமங்கள் முதலிய சீனா பெற்ற பல சாதனைகளை, மக்கள் சீனம் நிகழ்ச்சியின் மூலம் உங்களுக்காக அறிமுகப்படுத்தி வருகிறேன். இது, இந்திய நண்பர்கள் சீன வளர்ச்சிகளை அறிந்து கொள்கின்ற ஒரு சன்னலாகும்.
2008ம் ஆண்டு உருண்டோடியுள்ளது. சீன மக்களின் விரைவான வளர்ச்சி போல், கடந்த ஆண்டில் நீங்களும் சீராக முன்னேறி இன்பமாக வாழ்கிறீர்கள் என்று நம்புகிறேன். நானும், பணியிலும் வாழ்க்கையிலும் தொடர்ந்து கற்றுக் கொண்டு வளர்ந்து கொண்டிருக்கிறேன்.
2008ம் ஆண்டு, சீனாவில் பல பெரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சீன வானொலி தமிழ்ப் பிரிவின் 46ம் பிறந்த நாளைக் கொண்டாடினோம். அவற்றை ஒலிபரப்பும் வகையில், தமிழ்ப் பிரிவின் ஆசிரியைகளுடன் அதிக பணிகள் மேற்கொண்டேன். ஒரு ஆண்டுக்கு மேலான பணியில், "கற்றது கைமண்ணளவு. கல்லாதது, உலகளவு" என்பதை உண்மையாக உணர்ந்தேன்.
வருகின்ற ஆண்டில், நமது தமிழ்பிரிவின் இணையதளம் பெரிதும் மாற்றமடைந்து மேம்படுத்தப்படும். மேலும் அழகான இணையதளத்தை உங்களுக்கு உருவாக்கித் தர பாடுபடுவோம். இதற்கு, நேயர்களின் ஆதரவு, அதிக ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. அடுத்த ஆண்டு உங்களுக்கு மேலும் நல்ல நிகழ்ச்சிகளை வழங்க, நானும் தமிழ் பிரிவின் பிற உறுப்பினர்களும் தொடர்ந்து பாடுபடுவோம்.
இறுதியாக, சீன வானொலி நிலையத்தின் பணிகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களது நன்றிகளை மீண்டும் தெரிவிக்கிறேன்.
புத்தாண்டில் புது மனிதனர்களாய் பல வெற்றிகளும் வளங்களும் பெற்று, பெருமகிழ்ச்சியோடு வாழ என் வாழ்த்துக்கள். 2009ம் ஆண்டில் சந்திப்போம்.