• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-24 16:55:42    
ஜுடோ விளையாட்டுப் போட்டி

 


cri
21ம் நாள் பிரான்ஸில் நடைபெற்ற அனைவரும் கலந்து கொள்ளக்கூடிய முதல் உலக ஜுடோ சாம்பியன் பட்டப்போட்டியின் இறுதி போட்டியில், சீனாவின் வீராங்கனை துங் வென், ரஷிய வீராங்கனை இவஷென்கோவை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் பெற்றார்.

ஹார்பின் உலக பல்கலைகழக மாணவருக்கான 24வது குளிர்கால விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கை 22ம் நாள் எண்ணெய் நகரம் எனப்படும் தா சிங் நகரில் நடைபெற்றது. 55 பேர் தீபத்தை ஏந்தி, 2.6 கிலோமீட்டர் தீபத் தொடரோட்டத்தில் கலந்துகொண்டனர். 23ம் நாள் தீபத் தொடரோட்டம் ஹெ லுங் சியாங் மாநிலத்தின் மு தன் சியாங் நகரில் நடைபெற்றது.
21ம் நாள் மலேசியாவில் நடைபெற்ற 2008ம் ஆண்டு மேல்நிலை பூப்பந்து போட்டியின் இறுதிபோட்டி முடிவடைந்தது. 5 சாம்பியன் பட்டங்கள் வழங்கப்பட்டன. மலேசியா ஆடவர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றது. ஆடவர் ஒற்றையர் போட்டியில் மலேசிய புகழ் பெற்ற வீரர் லி சுங் வேய், 2-0 என்ற ஆட்டகணக்கில்

டென்மார்க் வீரர் peter gadeவை தோற்கடித்தார். மகளிர் ஒற்றையர் போட்டியில் சீன ஹாங்காங்கின் வீராங்கனை சோ மி, 2-0 என்ற ஆட்டக்கணக்கில் தனது சக அணி தோழி வாங் சேன்னை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.
21ம் நாள் ஸ்பானிய கால்பந்து அணிகளுக்கிடை போட்டி தொடர்ந்து நடைபெற்றது. BARCELONA அணி, 2-1 என்ற கோல்கணக்கில் VILLARREAL அணியை தோற்கடித்து, 10 புள்ளிகள் பெற்று தரவரிசையில் முதலிட்டம் வகிக்கின்றது.
இத்தாலி கால்பந்து அணிகளுக்கிடை போட்டியின் 17வது சுற்றுப் போட்டியின் 2 ஆட்டங்களில், உபசரிப்பு அணியான AC MILAN அணி, 5-1 என்று ஆட்டக்கணக்கில் UDINESE அணியை தோற்கடித்தது. JUVENTUS அணி, 3-1 என்ற கோல் கணிக்கில் ATLANTA அணியை தோற்கடித்தது.

NBA கூடைப்பந்து போட்டி லிக், 23ம் நாள் மிக புதிய அணிகளின் ஆற்றல் தரவரிசையை வெளியிட்டது. சீனாவின் வீரர் யாவ் மிங் விளையாடுகின்ற ஹியுஸ்டன் ராக்கெட்ஸ் அணி, இத்தரவரிசையின் 7வது இடத்தை வகிக்கின்றது. சீனாவின் இன்னொரு வீரர் யி சியன் லியன் சேவை புரிகின்ற நியு ஜெர்ஸி நெட்ஸ் அணி, 17வது இடத்தை வகிக்கின்றது.
இந்த கால் ஆண்டின் 9வது வாரத்தின் மிக சிறந்த வீரரை NBA கூடைப்பந்து போட்டி லீக் அதே நாள் வெளியிட்டது. நியு ஓர்லியன்ஸ் ஹேர்நெட்ஸ் அணியின் கிரிஸ் பால், ஓலென்டோ மேஜிக் அணியின் வீரர் நெல்சன், மேற்கு மற்றும் கிழக்குப்பகுதியின் மிக சிறந்த வீரர்களாக சேர்க்கப்பட்டனர்.