• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 12:33:01    
ஜெயா

cri

வணக்கம் நேயர்களே. நான் ஜெயா. முதலில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
2009ம் ஆண்டு புத்தாண்டின் மணியோசை, ஒலிக்க இருக்கிறது. பழையதை விட்டு, புதியதை வரவேற்கும் அருமையான இந்தத் தருணத்தில், நான், மகிழ்ச்சியுடன், உலகில் பல்வேறு இடங்களில் வாழ்கின்ற தமிழ் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது, எனது பொறுப்பில், உங்களுக்கு வழங்கப்பட்ட சீனத் தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சியாகும். நீங்கள் கேட்டுள்ளீர்களா? இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, புதன் கிழமை இடம்பெறும் சீனத் தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சியில் நீங்கள் எனது குரலைக் கேட்கலாம். இதைத் தவிர, கடந்த ஆண்டில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற காலத்தில், செவ்வாய் கிழமை ஒலிபரப்பாகிய பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகள் என்ற நிகழ்ச்சிக்கும் நான் பொறுப்பேற்றேன்.
இவ்வாண்டில், நான், சில நண்பர்கள் வழங்கிய கடிதங்களைப் பெற்றேன். இந்தக் கடிதங்களில், சிலர் என்னிடம் தமது விருப்பங்களைத் தெரிவித்தனர். சிலர் தமக்கு அருகில் நிகழ்ந்த, அக்கறை வாய்ந்த கதைகளை விளக்கினர். வேறு சிலர், என் மீது கவனம் செலுத்தியதோடு, நான் செவ்வனே பணி புரிய வேண்டுமென ஊக்குவித்தனர். இதை வாய்ப்பாகக் கொண்டு, நீங்கள் அனைவரும் வழங்கிய உதவி மற்றும் ஆதரவுக்கு, உளமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். உங்கள் ஆதரவோடு தான், எனது பணிகள் தங்குதடையின்றி நடைபெற முடியும். விரைவில் வரும் 2009ம் ஆண்டில், மேலதிகமான உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். நீங்கள் தொடர்ந்து நல்லாதரவை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
கடைசியாக, புத்தாண்டில் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். மிக்க நன்றி. வணக்கம் நேயர்களே.