இவ்வாண்டு, திபெத்துக்குச் சென்று பயணம் மேற்கொண்ட, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சம் ஆகும். சுற்றுலா வருமானம் 220 கோடி யுவானை எட்டும் என்று மதிப்பிடப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற திபெத் பொருளாதாரப் பணிக் கூட்டத்திலிருந்து இத்தகவல் கிடைத்தது.
இவ்வாண்டு மார்ச் 14ம் நாள் லாசா வன்முறைக்கு பிந்திய காலத்தில், திபெத் சுற்றுலாத் துறை சற்று தேக்க நிலையில் இருந்தது. தற்போது, திபெத் சுற்றுலாத் துறை மீட்கப்பட்டு வரை துவங்கியுள்ளது என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் Qangba Puncog கூட்டத்தில் கூறினார்.
மேலும் அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக, அக்டோபர் திங்கள், திபெத், குளிர்கால சுற்றுலா தள்ளுப்படி நடவடிக்கைகளைத் தொடங்கியது.
|