• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 14:48:43    
வாணி

cri
வணக்கம், நேயர்களே, நண்பர்களே. வாணி பேசுகின்றேன். உங்களுடன் சேர்ந்து இன்னொரு புத்தாண்டை வரவற்கின்றோம்.
2008ம் ஆண்டு ஒரு எளிதான ஆண்டு அல்ல. சீன வானொலி தமிழ்ப் பிரிவு குடும்பத்தை சேர்ந்த நாம் அனைவரும் தமிழ் ஒலிபரப்பின் 45வது ஆண்டு நிறைவைக் கொண்டாடினோம். சீனாவைப் பொருத்த வரை, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி என்ற பெரும் நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் வரவேற்ற நிலையில்ல், வசந்த காலத்தில் கடும் பனி சீற்றம் ஏற்பட்டு, பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. பிறகு, மே திங்கள் 12ம் நாள், வரலாற்றில் அரிதான ரிச்டர் அளவையில் 8.0 ஆக பதிவான கடும் நிலநடுக்கம் சீனாவின் சி ச்சுவான் வென் சுவான் பிரதேசத்தில் நிகழ்ந்தது. இருந்த போதிலும் சீன மக்கள் இன்னல்களைச் சமாளித்து பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை மிக சிறப்பாக நடத்தினர். உலக மக்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றனர். இந்திய வீரர் ஒருவர் இந்தியாவின் ஒலிம்பிக் வரலாற்றில் முதலாவது தனிநபர் ஒலிம்பிக் தங்க பதக்கத்தை இப்போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது, உலக மக்கள் அனைவரும் நிதி நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்பை எதிர்நோக்குகின்றனர். அண்மையில் இந்திய மும்பை மாநகரில் பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்தது. பயங்கரவாத எதிர்ப்பு பணி முன்பை விட மேலும் அவசியமானது என்று அனைவரும் உணர்ந்துள்ளனர். சீன வானொலி நிகழ்ச்சி மூலம் நேயர்கள் அனைவரும் எங்களுடன் சேர்ந்து இன்பம் துன்பம் அனைத்தையும் பகிர்ந்து வருகின்றனர். சீன மக்களுக்கு பெரும் ஆதரவு அளித்துள்ளனர். இன்றைய உலகம் ஒரு கிராமம் போல இருக்கின்றது. இந்தக் கிராமத்தில் ஒருவரான நானும் நீங்களும் முன்பை விட மேலும் நெருக்கமாக ஒத்துழைத்து, ஒருவருக்கு ஒருவர் ஆதரவு அளிக்க வேண்டும். அல்லவா?
கடந்த ஓராண்டில் சீன உணவு அரங்கம், தமிழ் மூலம் சீனம், அறிவியல், கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு ஆகிய நிகழ்ச்சியில் தொடர்ந்து சீனா பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன். பல நேயர்கள் கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் சீன உணவு வகைகள் தயாரிப்பு மற்றும் சீன மொழியைக் கற்கும் அனுபவங்கள் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, சீன மொழியைக் கற்க பலர் ஆர்வம் காட்டினர். பல நேயர்கள் எங்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது, ni hao, xie xie, zai jian முதலிய எளிதான சொற்களைப் பயன்படுத்த முடிகிறது. அவற்றைக் கேட்ட போது மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பல நேயர்கள் பங்கெடுத்துள்ளனர். மேலும் அதிகமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கெடுக்க விருப்பம் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் புத்தாக்க அம்சங்களைச் சேர்க்க நீங்கள் கடிதம் மூலம் யோசனைகளை முன்வையுங்கள். இதில் பங்கெடுக்க விரும்பும் நேயர்கள் மறவாமல் தங்களின் தொடர்பு எண்ணைத் தெளிவாக தெரிவிக்கவும்.
தமிழன்னைப் புகழ்பாடி, தரணியெங்கும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன். நன்றி வணக்கம்.