• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-26 10:13:31    
THE ASSOCIATED PRESS மதிப்பீடு

cri
அமெரிக்காவின் புகழ் பெற்ற நீச்சல் வீரர் மிகேல் பெல்ஸ், 2008ம் ஆண்டின் மிக சிறந்த வீரர் என்று THE ASSOCIATED PRESS மதிப்பீடு செய்தது. இச்சாதனையை பெற்ற 3வது நீச்சல் வீரர் அவராவார். 23 வயதான பெல்ஸ், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 8 தங்கப்பதக்கங்களை பெற்றார். அதன் மூலம் ஒரே ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலும் ஒலிம்பிக் வரலாற்றிலும் மிக அதிக தங்கப்பதக்கங்களை வென்ற வீரராக அவர் மாறினார்.

சீனாவின் குவாங் சோ நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி ஏற்பாடுக்ளை பற்றி வெளி நாட்டு தூதர்களுக்கு அறிமுகம் செய்யும் கூட்டம் 22ம் நாளிரவு பெய்ஜிங்கின் சர்வதேச பொழுதுபோக்கு நிலையத்தில் நடைபெற்றது. குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி அமைப்பு குழுவின் நிரந்தர துணை தலைமை செயலர் சு யுய் சேன், சீனாவிலுள்ள அனைத்து ஆசிய நாடுகளின் தூதர்களுக்கு அப்போட்டிக்கான ஆயத்தப் பணிகளை அறிமுகம் செய்தார். உலக நிதி நெருக்கடி, போட்டியின் ஆயத்தப் பணிக்கு ஏற்படுத்திய பாதிப்பை குறைப்பதற்கு பெருமளவில் பாடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது நிதி நெருக்கடி, உலகத்தையே பாதிக்கின்றது. அனைத்து நாடுகளும் பாதிப்புகளை தவிர்க்க முடியாது. குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் அமைப்புக் குழு, இப்பாதிப்புகளை சமாளிக்கும் நடவடிக்கைகளை கண்டறிந்து, பாடுபட்டு வேலை செய்து, ஆசிய விளையாட்டு போட்டிகளின் வணிக சந்தையை துவக்கி வைக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு உலக நிதி நெருக்கடி இப்போட்டிக்கு ஏற்படுத்தும் மிக பெருமளவிலான, பாதிப்பை குறைக்க வேண்டும் என்று ஆசிய விளையாட்டுப் போட்டியின் சந்தை வளர்ச்சி குறித்து அவர் கூறினார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அமைப்புக் குழு, நடவடிக்கைகளை வகுத்து, உள் நாட்டுத் தேவையை விரிவுபடுத்தும் கொள்கையுடன் தொடர்ந்து, பொருளாதார முன்னேற்றத்துக்கு பங்காற்ற வேண்டும். பொருளாதார சூழல் கடினமாக உள்ளது. ஆனால் ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த விண்ணப்பம் செய்த போது குவாங் சோ அளித்த அனைத்து வாக்குறுதிகளும், நனவாக்கப்படும் என்று சி யுய் சன் தெரிவித்தார்.