அழகான புன்னகையுடன் அனைத்து ஆண்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார் நடிகை XU JING LEI. பின்னர் அவர் திரைப்பட இயக்குநராக பணிபுரிகிறார். அவரது எதிர்கால வளர்ச்சித் திசை பற்றி மக்கள் மதிப்பிட்ட போது, வலைப்பூ பக்கம் கொண்டவர்களில் அவர் மிகப் பெரிய கவனத்தை ஈர்ப்பவராக மாறியுள்ளார். ஆனால், தற்போது திரைப்படத்திலும் வலைப்பூ பக்கத்திலும் அவரது அடிச்சுவடுகளைக் கண்டறிவது கடினம். ஏனென்றால், தலைமை இதழாசிரியர் என்ற புதி தொழில் தகுநிலையை அவர் கொண்டுள்ளார். இதழாசிரியராக பணிபுரியும் நாட்களில் தாம் விரும்பும் வாழ்க்கையை அவர் அனுபவிக்காலம் என்று கருதுகின்றோம்.
தனது விருப்பப்படி இணையதள இதழை XU JING LEI உருவாக்கத் துவங்கினார். அவரைப் போன்ற இளம் பெண்கள் இதழாசிரியருக்கு மதிப்பளிக்கும் தலைமுறையினராக இருக்கின்றனர். நடிகை, இயக்குநர் ஆகியவை அவரது குழந்தை பருவத்திலான கனவு அல்ல. தலைமை இதழாசிரியர், அப்போது நல்ல மதிப்பு கொண்ட அவரது இலட்சிய சிந்தனையாகும்.
இன்றுவரை அவரது இணையதள இதழ் மென்மேலும் வரவேற்கப்பட்டு வருகிறது. அதன் லாபம் 10 கோடி யுவானைத் தாண்டியுள்ளது என்று கூறப்படுகிறது. பல்வேறு துறைகளில் முன்னணியில் இருப்பதால் XU JING LEI மதி நுட்பம் நிறைந்த பெண்மணியாக கருதப்படுகின்றார். தன் விருப்பப்படி வாழ்க்கையை தெரிவு செய்ததன் மூலம், அவர் தனது திறமையையும் மதி நுட்பத்தையும் முழுமையாக வெளிப்படுத்தி, சீனப் பெருநிலப்பகுதியைச் சேர்ந்த தற்போதைய நடிகைகளில் உண்மையான "கருத்து செல்வாக்குள்ள நபராக" மாறியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் XU JING LEI வாழ்க்கைத் தொழிலர் வாழ்கின்றார். காலையில் படுக்கையை விட்டெழுந்ததும் அவர் முதலில் கணினிக்கு முன் உட்கார்ந்து, பணியின் வளர்ச்சிப் போக்கையும் இணையதளத்தில் இதழ் பதிவிறக்கம் செய்யப்பட்ட நிலைமையையும் அறிந்து கொள்கிறார். சில சமயம் இதழில் தலைமை இதழாசிரியரின் உரையையும் அவர் எழுதுகிறார்.
மக்களின் எண்ணத்தில் திரைப்பட நட்சத்திரத்தின் பொழுது போக்கு என்ற கருத்திற்கு மாறாக தனது இதழை உண்மையான இலட்சியமாக மாற்றும் வகையில், அவர் தனது இதழை ஒரு நிறுவனமாக நடத்துகிறார்.
பெண் திறமைசாலியாக கருதப்படும் XU JING LEI, இலட்சிய சிந்தனை பற்றியும் வாழ்க்கை பற்றியும் விவாதம் செய்ய விரும்புகிறார். தற்போது சாதாரண மக்களில் ஒருவர் போலவே இருக்கிறார். அவர் தாம் விரும்பும் வேலையில் ஈடுபட்டு, தனது தேவையைத் தெளிவாக அறிந்து தன்னுடைய உடல் நலத்தில் கவனம் செலுத்துகிறார். அண்மையில் வென் ச்சுவன் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உதவியளித்தது தவிர, அங்கே சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிடுவதாக அவர் கூறினார். பணத்தையும் பொருட்களையும் நன்கொடையாக வழங்கிய அவர் இன்னும் கவலைப்படுகிறார். வாழ்க்கை ஓரளவில் நிதானமற்றதாக உள்ளது என்று அவர் கருதுகிறார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற நாட்கள் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்ட காலமாக மாறின.
|