• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 14:42:15    
மோகன்

cri

  வணக்கம் நேயர்களே! என் பெயர் மோகன்.


ஜனவரி திங்கள் முதலாம் நாளில் புத்தாண்டு மலர்ந்துள்ளது. இச்சிறப்பான தருணத்தில், நேயர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

சீனாவை பொறுத்த வரை, 2008ம் ஆண்டு மிகவும் அசாதாரண ஆண்டாகும். கடந்த ஆண்டின் துவக்கத்தில், சீனாவின் தென் பகுதி பனி மற்றும் மழை சீற்றத்தால் அவதிக்குள்ளானது. 2008ம் ஆண்டு மே 12ம் நாள், சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் ஏற்பட்ட ரிக்டர் அளவு கோலில் 8.0 ஆக பதிவான நிலநடுக்கத்தில் குழந்தைகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பாமர மக்கள் உயிரிழந்தனர். ஆனால், அந்த இயற்கை சீற்றங்களில், நேயர்கள் உள்பட அனைத்து உலக மக்களும் சீன அரசு மற்றும் மக்களுக்கு மாபெரும் ஆதரவையும் உதவியையும் வழங்கியுள்ளனர். உங்களது மனித நேய எழுச்சியை அச்செயல் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது. சீனாவில் கவனம் செலுத்தி வருகின்ற தமிழ் மொழி நேயர்கள் அனைவருக்கும் நான் உன்னத மதிப்புக்களை உரித்தாக்குகின்றேன்.
கடந்த ஆண்டு, நான் விளையாட்டுச் செய்திகளை மொழி பெயர்த்து, வாசித்து வருகின்றேன். 12 திங்கள் காலப் பணியில் எளிய மற்றும் சிக்கலான அனுபவம் அமைந்திருந்த்து. ஆனால் இவ்வாண்டில், இலக்கணம், உச்சரிப்பு, வாக்கிய அமைப்பு முறை ஆகியவற்றில் பல புதிய அம்சங்களை நான் கற்றுக்கொண்டேன். குறிப்பாக, கடிதங்கள் மூலம், பல நேயர்களே எனக்கு ஊக்கம் அளித்தனர். 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, நேயர்களுக்கு நாங்கள் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நகரங்கள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சீனாவிலுள்ள வெளிநாட்டு தூதரின் நல்வாழ்த்துக்கள் முதலிய சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கினோம். இந்த நிகழ்ச்சிகள் மனநிறைவு அளித்ததை நீங்கள் தெரிவித்தீர்கள். மிக்க நன்றி. இப்பணிகளின் மூலம், என் மொழி பெயர்ப்புத் திறனையும் தொடர்ந்து உயர்த்தி வருகின்றேன். இதற்காக நான் மேலும் அதிகமாக பாடுபட வேண்டியுள்ளது.
2009ம் ஆண்டில், உங்களுக்கு மேலதிக மகிழ்ச்சியை எங்கள் நிகழ்ச்சி வழங்க வேண்டுமென விரும்புகின்றேன். நாம் இணைந்து வெற்றியடைய என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன். உங்களுடன் நான் தொடர்பு கொள்ள முயன்று வருகின்றேன்.
எங்களின் சேவைப் பணிக்கு நீங்கள் மேலும் அதிக ஆதரவு அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களது ஆதரவு, எங்கள் பணிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக விளங்கும். எதிர்காலத்தில், உங்கள் நல்ல நண்பராக மாற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். புத்தாண்டு வாழ்துக்கள்.
நன்றி!