1978ம் ஆண்டு முதல், இது வரை, நடுவண் அரசு, திபெத்தின் கல்வித் துறையில் 2200 கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கல்வி பணியகத்தின் புள்ளிவிபரம் காட்டியது.
அரசின் ஒதுக்கீட்டுத் தொகை, திபெத் கல்வித் துறையின் வளர்ச்சிக்கும் திறமைசாலிகளைப் பயிற்றுவிப்பதற்கும் நிதியுதவியை வழங்கியதோடு, பள்ளிக்குச் சென்ற திபெத்தின் மக்களின் உரிமையையும் செவ்வனே உத்தரவாதம் செய்துள்ளது. தற்போது, திபெத்தில், குழந்தைக்கான கல்வி, துவக்க மற்றும் இடை நிலைப் பள்ளிக் கல்வி, சிறப்புக் கல்வி, உயர் நிலை கல்வி முதலியவற்றால் உருவாகிய நவீனத் தேசிய இனக் கல்வி முறைமை, அடிப்படையில் நிறுவியுள்ளது. திபெத்தின் கல்வி இலட்சியம், வரலாற்றில் மிகச் சிறப்பாகவும் விரைவாகவும் வளரும் காலத்தில் நுழைந்துள்ளது என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கல்விப் பணியகத்தின் அடிப்படைக் கல்வி அலுவலத்தின் தலைவர் Yu Xiangqin அம்மையார் அறிமுகப்படுத்தினார்.
|