திபெத்துக்கான ஒதுக்கீட்டுத்தொகை
cri
2008ம் ஆண்டு நடுவண் அரசு திபெத்தில் 1600 கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டில் இருந்ததை விட இது 44 விழுக்காடு அதிகரித்து, வரலாற்றில் மிக உயர் பதிவாகியுள்ளது.
இவ்வாண்டு லாசாவில் மார்சு 14 சம்பவத்தால், திபெத் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. முதல் 6 திங்களில், திபெத்தில் நிலையான இருப்பு முதலீட்டுத் தொகையும், தொழில் துறை பொருளாதாரத்தின் அதிகரிப்பு வேகமும் குறைந்துள்ளன. இவ்வாண்டின் பிற்பாதியில், நடுவண் அரசின் ஒதுக்கீடு பயன் பெற துவங்கியது. இவ்வாண்டில் திபெத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 3900 கோடி யுவானைத் தாண்டி, கடந்த ஆண்டில் இருந்ததை விட 10 விழுக்காடு அதிகரிக்கக் கூடும் என்று மதிப்பிடப்படுகின்றது.
|
|