• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-29 10:40:35    
பண்பாட்டுத் தற்சார்பு தொழிற்துறையின் பொருட்காட்சி

cri

சீன பெய்ஜிங் சர்வதேச பண்பாட்டுத் தற்சார்பு தொழிற்துறையின் மூன்றாவது பொருட்காட்சி அண்மையில், பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. சீன தைவான் பிரதேசத்தின் பிரதிநிதித்துவம் மற்றும் செல்வாக்கு வாய்ந்த பண்பாட்டு தற்சார்பு தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் கலந்துகொண்டன. பொருட்காட்சியில் இந்த தொழில் நிறுவனங்கள், சுயமாக தயாரித்த பல பொருட்கள், மக்களை ஈர்த்தன. இதன் மூலம், சீன பெருநிலப்பகுதியுடனான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த தைவான் பண்பாட்டு தற்சார்புத் துறையினர் விரும்புகின்றனர்.


சீன பண்பாட்டு ஆணையம், சீன ஒலிப்பரப்பு, திரைப்படம் மற்றும் தொலைகாட்சி ஆணையம், சீன தேசிய செய்தி வெளியீட்டகத் தலைமை அலுவலகம், பெய்ஜிங் அரசு ஆகியவை, சீன பெய்ஜிங் சர்வதேச பண்பாட்டுத் தற்சார்பு தொழிற்துறையின் மூன்றாவது பொருட்காட்சிக்கு கூட்டாக ஏற்பாடு செய்தன. 5 நாட்களில், பெய்ஜிங் மாநகரின் 8 இடங்களிலுள்ள சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் சதூர மீட்டர் இடப்பரப்பில் இந்தப் பொருட்காட்சி வெற்றிகரமாக நடைபெற்றது.


டிசம்பர் திங்கள் 17ம் நாள், இந்த பண்பாட்டுத் தற்சார்பு தொழிற்துறையின் பொருட்காட்சி துவங்கிய பின், 18ம் நாள், தைபெய் பண்பாட்டு தற்சார்பு தொழிற்துறைக்கான சிறப்புப் பொருட்காட்சியும் தொடங்கியது. 4 ஆயிரம் சதுர மீட்டர் இடப்பரப்பில் நடைபெற்ற தைபெய் சிறப்புப் பொருட்காட்சியில், ஏறக்குறைய 64 தைவான் தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்த எண்ணிக்கை, வரலாற்றில் மிக அதிகமானது. தவிர, இந்த தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அதிகாரிகள், பண்பாட்டுத் துறையின் ஆராய்ச்சி பணியாளர்கள் அடங்கிய பிரதிநிதிக் குழுவை தைவான் தரப்பு அனுப்பியது.


நண்பர்களே, பண்பாட்டுத் தற்சார்பு தொழிற்துறையின் பொருட்காட்சி என்ற தகவலை அறிந்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.