கருத்தரங்கிற்கு இதயப்பூர்வ நல்வாழ்த்துக்கள்
-- வாங் கங் நியன் 18-12-08
மதிப்புக்குரிய அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்ற தலைவர் திரு எஸ் செல்வம் அவர்களுக்கும், மன்ற தலைமைச் செயலாளர் திரு பல்லவி கே. பரமசிவன், பொருளாளர் திரு எஸ்.எம்.இரவிச்சந்திரன் அவர்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 20வது கருத்தரங்கு நடைபெறும் இந்நாளில் நேரில் வந்து கலந்து கொள்ளாத வருத்தம் இருப்பினும் என் சார்பிலும் சீன வானொலி நிலையத்தின் அனைத்து பணியாளர்களின் சார்பிலும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 20வது கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகின்றேன்.
2008ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நாள் தமிழ் ஒலிபரப்பு அதன் 46வது பிறந்த நாளை வரவேற்றது. 45வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் நமது மன்றத்தின் தலைமைச் செயலாளர் பல்லவி கே பரமசிவன், ஈரோடு சீன வானொலி நேயர் மன்றத்தின் தலைவர் பி.ஏ.நாச்சிமுத்து இருவரும் தமிழ்ப் பிரிவு நடத்திய கொண்டாட்ட நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அவர்களின் தனிப்பட்ட செலவில் பெய்ஜிங்கிற்கு வருகை தந்தனர். அவர்கள் பெய்ஜிங்கில் தங்கியிருந்த போது 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் செய்தி அறிவிப்புக்காக வானொலி நிலையத்தின் பணியாளர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக பணிபுரிந்து கொண்டிருந்தனர். எனவே அவர்களை சந்தித்து உரையாடிய குறுகிய நேரத்தில் இந்திய-சீன நட்புறவின் வளர்ச்சிகள் பலவற்றை அறிந்து கொண்டேன். வாய்ப்பு இருந்தால் நான் தமிழகத்திற்கு வந்து உங்கள் அனைவருடனும் கலந்துரையாட விரும்புகிறேன்.
கடந்த 45 ஆண்டுகளில் தமிழ் ஒலிபரப்பு போதியளவு வளர்ச்சியடைந்துள்ளது. தமிழ்ப் பிரிவு இப்போது ஒலிபரப்பு உத்தியை மாற்றி சீன வானொலி நிலையத்தின் இலட்சியத்துடன் இணைந்துள்ளது. சீன வானொலியின் ஒலிபரப்பு இலட்சியத்தில் ஈடுபடும் அதேவேளையில் தமிழ் இணைய தளத்தின் வளர்ச்சியில் தமிழ்ப் பிரிவு பணியாளர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். தமிழ்ப் பிரிவில் பல இளம் பணியாளர்கள் உற்சாகத்துடன் இந்த இலட்சியத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இன்னும் அதிக முயற்சியுடன் விரைவாக வளர்வதற்கு ஆதரவளிக்குமாறு சீன வானொலி நேயர் மன்ற 20வது கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்து தெரிவிக்கும் இவ்வேளையில் உங்களை வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாண்டில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. சீன வானொலி நிலையத்தின் இலட்சியமும் போதியளவில் வளர்ந்துள்ளது. கிழக்கு ஐரோப்பாவுக்கான 5 மொழிகளில் இணையதளங்கள் தொடங்கப்பட்டன. ஜப்பான் மற்றும் தென் கொரிய மொழி இணையதளங்கள் பல்வகை வடிவங்களில் மெருகேற்றப்பட்டு திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. ஆகவே சீன வானொலியை சிற்றலை வானொலி மூல ஒலிபரப்போடு நில்லாமல் இணையதளம், உள்ளூர் பண்பலை ஒலிபரப்பு, செல்லிடபேசி மூல செய்தியறிவிப்பு போன்ற பன்னோக்கு செய்தி ஊடகமாக மாற்ற பாடுபடுகின்றோம். இத்தகைய செய்திச் சேவைக்கு ஒளிமயமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுவதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். ஆகவே நம்பிக்கை நிறைந்த எங்கள் இலட்சியத்தில் உங்கள் பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்றும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
சீன-இந்திய நட்பு நீடுழி வாழ்க!
தமிழ் நேயர் மன்றப் பணி பொங்கி வளர்க!
உங்கள் வாழ்க்கை தேனினும் இனிமையாக அமைக!
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றி!வணக்கம்
வாங் கங் நியன் சீன வானொலி இயக்குனர்
1 2 3
|