• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 21:50:59    
சூ ச்சோவின் பழங்காலத் தோட்டக் கலை

cri

கிழக்குச் சீனாவின் சியாங் சூ மாநிலத்தின் சூ ச்சோ நகர், சீனாவில் நீண்டகால வரலாறுடைய நகரமாகும். தனது அழகான இயற்கைக் காட்சிகள் மற்றும் தோட்டக் கலையால், அது புகழ்பெறுகிறது. சூ ச்சோவின் பழங்காலத் தோட்டக் கலையின் வரலாறு, கி.மு 6வது நூற்றாண்டிலான ச்சூன் ச்சியோ வம்சக்காலத்தில் துவங்கியது. மிகப் பழமையான தனியார் தோட்டம், 4வது நூற்றாண்டு தோங் சின் வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்டது. பல்வேறு வம்சக்காலங்களில், பல தோட்டங்கள் கட்டியமைக்கப்பட்டன. புகழ்பெற்ற தோட்டங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள், மென்மேலும் அதிகமாக மாறியது. மிங் மற்றும் சிங் வம்சக்காலங்களில், சூ ச்சோ, சீனாவின் மிகச் செழுமையான பிரதேசங்களில் ஒன்றாகும். தனியார் தோட்டங்கள் இங்குள்ள பல்வேறு இடங்களில் காணப்படலாம். 16 முதல் 18வது நூற்றாண்டுகாலத்தில், சூ ச்சோவில் தனியார் தோட்டங்களின் எண்ணிக்கை, 200க்கு மேலாகும். தற்போது, நன்றாக பேணிக்காக்கப்பட்டுள்ள தோட்டங்களின் எண்ணிக்கை, 10க்கு மேலாகும். அவற்றால், சூ ச்சோ, மனிதகுலத்தின் சொர்க்கம் என பாராட்டப்படுகிறது.

இத்தோட்டங்களில், Changlangting, Shizilin, Zhuozhengyuan, Liuyuan ஆகிய தோட்டங்கள், முறையே, சோங், யுவான், மிங், சிங் ஆகிய வம்சங்களின் தோட்டக் கலைப் பாணியை பிரதிநிதித்துவப்படுகின்றன. அவை, சூ ச்சோவின் நான்கு புகழ்பெற்ற தோட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. தவிர, Wangshiyuan தோட்டமும் புகழ்பெறுகிறது.