• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 12:31:14    
திலகவதி

cri
அன்புள்ள நேயர்களே! வணக்கம். புத்தாண்டை வரவேற்கும் இந்த அருமையான வேளையில் இந்த சிறப்பு நிகழ்ச்சி வழியாக உங்களைச் சந்திப்பதில், மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். தெரிந்தோ தெரியாமலோ, நான் சீன வானொலி தமிழ பிரிவில் சேர்ந்து, ஓராண்டு இரு திங்களும் ஆகிவிட்டன.

தமிழ் இணையத் தளத்தின் பணியாளராக, செய்திகளையும் சிறப்புக் கட்டுரைகளையும் தமிழ் இணைய பக்கத்தில் வெளியிடுவது எனது முக்கிய பணியாகும். 2008ம் ஆண்டில், சீன மக்களும் உலக மக்களும், பலவித நிகழ்வுகளை அனுபவித்துள்ளனர். இவ்வாண்டில், சிச்சுவான் வென்ச்சுவான் நிலநடுக்கமும், லாசா மார்ச் 14ம் நாள் வன்முறை சம்பவம், உலக நிதி நெருக்கடி முதலிய துயரமான நிகழ்ச்சிகளும், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சன்சோ 7 விண்வெளி பயணம், சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட 30வது ஆண்டு நிறைவு முதலிய மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. 2008ம் ஆண்டு, நமது மனதில் ஆழப்பதிந்துள்ளது அல்லவா? வரும் 2009ம் ஆண்டு, மேலும் அதிகமான மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் கொண்ட, துயரமில்லாத அமைதியான நிதானமான ஆண்டாக இருக்கவே நான் விரும்புகின்றேன்.

2008ம் ஆண்டில், தமிழ் பிரிவின் 45வது நிறைவை கொண்டாடி 46வது பிறந்த நாளை வரவேற்றிருக்கின்றோம். தமிழ் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக இருந்து, மகிழ்ச்சியாகவும், பெருமையுடனும் சேவை செய்து வருகின்றேன். எதிர்காலத்திலும், உங்களுக்குச் சேவை புரிந்து, தமிழ் இலட்சியத்தின் வளர்ச்சிக்காக மேலும் பாடுபட்டு பணிபுரிய இருக்கின்றேன்.

2008ம ஆண்டு, சீன இசை நிகழ்ச்சியில் உங்களுக்கு பல்வேறு சீன பாடல்களை வழங்கினேன். அப்பாடல்கள் உங்களுக்குப் பிடித்ததா? அவற்றின் மூலம், 2008 ஆண்டின் முக்கிய நிகழ்ச்சிகளை சந்தித்த சீன மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினேன். சீன இசையின் தனிச்சிறப்பை விவரித்துக் காட்டினேன், உங்களுக்கு மகிழ்ச்சி வழங்குவதே சீன சீன இசை நிகழ்ச்சியின் நோக்கமாகும். இசை என்றால் எல்லைக்கு அப்பாற்பட்ட ஒரு பண்பாட்டு வகை. அநேகமாக, நீங்கள், இப்பாடல்களின் சொற்களைப் புரிந்து கொள்ள முடியந்திருக்காது. ஆனால், அவற்றின் இராகம் மற்றும் தாளம் குரல் வளம் ஆகியவற்றின் மூலம், நீங்கள், அப்பாடல்கள் வெளிப்படுத்திய உணர்வுகளையும் சிந்தனைகளையும் ஓரளவு புரிந்து கொள்ளலாம் என்றே நம்புகின்றேன்.

கடைசியில், உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும், தமிழ்பிரிவின் ஆசிரியர்களுக்கும், நிபுணர்களுக்கும், என் உடன் பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும், மகிழ்ச்சியாகவும், நலமாகவும் வாழ்க! வளர்க! நன்றி! வணக்கம்.