வணக்கம் நேயர்களே. முதலில், அருமையான புத்தாண்டு வாழ்த்துக்கள் நான் தெரிவிக்கின்றேன். தற்போது, மக்கள் சீனம், பண்பாட்டுக் கண்ணோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு நான் பொறுப்பேற்கின்றேன். சீனப் பொருளாதாரத்தின் சாதனைகள், ஆப்பிரிக்காவிலான முதலீட்டு வளர்ப்பு, சீனாவிலுள்ள வெளிநாட்டு முதலீடு முதலியவை, மக்கள் சீனம் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றேன். அதேவேளையில், சீனாவில் நடைபெற்ற சர்வதேச பண்பாட்டு விழாக்கள், கலை நிகழ்ச்சி, தொல் பொருட்களின் பாதுகாப்பு முதலியவை பண்பாட்டுக் கண்ணோட்டத்தில் இடம் பெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகள், சீனாவை அறிந்து கொண்டு, சீன-இந்திய பரஸ்பரம் உணர்வை அதிகரிக்கும் பாலமாக மாறியுள்ளன.
2008ம் ஆண்டு போய்விட்டது. கடந்த ஆண்டில், பல்வேறு துறைகளில் சீனா சாதனைகளை பெற்றுள்ளது. உலக மக்களை ஈர்த்த பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது. உலகில் புகழ் பெற்ற பறவைக் கூட்டு, நீர் கன சதுரம் உள்ளிட்ட ஒலிம்பிக் அரங்களில் பல உலக சாதனைகள் படைக்கப்பட்டன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் பெய்ஜிங்வுக்கு வந்து, இந்த மாபெரும் விழாவில் கலந்துகொண்டு கொண்டாட்டினர். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பரமசிவன், நாச்சிமுத்து இருவரும், பெய்ஜிங்வுக்கு வந்து, டியென் அன் மன் சதுக்கம், கோடை மாளிக்கை, Temple of Heaven, Hongqiao சந்தை உள்ளிட்ட ஈர்ப்பு மிகுந்த இடங்களில் பார்வையிட்டனர். அதேவேளையில், சீன வானொலி தமிழ்ப் பிரிவின் 46ம் பிறந்த விழாவில் அவர்கள் கலந்துகொண்டு கொண்டாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெய்ஜிங் மாநகரில் சுற்று பயணம் மேற்கொள்ள, உங்களுக்கு வரவேற்பு நான் தெரிவிக்கின்றேன். நேயர்களே, புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மீண்டும் தெரிவிக்கின்றேன். 2009ம் ஆண்டு சந்திப்போம்.
|