• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 09:29:58    
ஒரு சுவையான இனிப்பு சூப்

cri
வாணி – மீண்டும் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்று வாணி, க்ளீட்டஸ் இருவரும் தொடர்ந்து சுவையான சீன உணவு வகைகள் பற்றி தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
க்ளீட்டஸ் –வாணி, இன்று எந்த வகை சீன உணவு பற்றி கூறுகின்றோம்?
வாணி – இன்று ஒரு சுவையான இனிப்பு சூப்பின் தயாரிப்பு முறையை நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.

க்ளீட்டஸ் – இனிப்பு சூப்? நல்லது. தயாரிப்பு முறை கடினமானதா?
வாணி – இல்லை, இல்லை. தயாரிப்பு நேரம் மட்டும் கொஞ்சம் அதிகம். ஆனால், தயாரிப்பு முறை மிகவும் எளிதானது.
க்ளீட்டஸ் – நல்லது. முதலில் தேவையான பொருட்களைத் தெரிவிக்கவும்.
வாணி – கூறுவேன்.
பச்சை பயிறு 500 கிராம்
கற்கண்டு 200 கிராம்
தாமரை விதை 100 கிராம்
க்ளீட்டஸ் – அவ்வளவு தானா?
வாணி – அவ்வளவு தான்.

     
வாணி – முதலில், பச்சை பயிறுகளை தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இந்த வேளையில், சில பயிறுகள் நீரில் மிதக்கக் கூடும். அவை பூச்சிக்களால் பாதிக்கப்பட்டவை. ஆகையால், அவற்றை வெளியே நீக்கலாம்.
க்ளீட்டஸ் – பிறகு, பச்சைப் பயிறுகளை தண்ணீரில் குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
வாணி – 2 மணி நேரத்துக்குப் பின், பச்சைப் பயிறுகளை போதிய நீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். வேகவைக்கப்படும் போக்கில், பாத்திரத்தில் மிதக்கும் பயிறுகளின் தோலை வெளியே நீக்கவும். மிதமான சூட்டில் தொடர்ந்து 2 மணி நேரம் சூடாக்க வேண்டும்.
க்ளீட்டஸ் – வேகவைக்கப்பட்ட தோல் இல்லாத பயிறுகளை வெளியே எடுக்கவும். ஆறிய பின், அரவை இயந்திரம் மூலம், அவற்றை மாவாக்க வேண்டும். பிறகு, பயிறு மாவை முன்பு தயாரிக்கப்பட்ட சூப்பில் போடலாம்.

வாணி – வேறு ஒரு வாணலியில், தாமரை விதைகளை, மேற்கூறிய செயல்முறையில் வேகவையுங்கள். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின், அவை மென்மையாக மாறிவிடும்.
க்ளீட்டஸ் – இரண்டு வகை சூப்பை ஒரே வாணலியில் சேர்க்கலாம். தொடர்ந்து அரை மணி நேரம் வேகவையுங்கள். கடைசியில், சூப்பில் கற்கண்டை அல்லது சர்க்கரையைப் போடுங்கள்.
வாணி – இன்றைய பச்சைப் பயிறு சூப் தயார். குளிர்ப்பதன பெட்டியில் வைக்கப்பட்ட பின், பயிறு சூப்பின் சுவை மேலும் சிறப்பானது. 

வாணி – சிறு குறிப்புகள், மாவாக்கப்பட்ட பச்சைப் பயிறு சூப்பை மீண்டும் வேகவைக்கும் போது, தீய்ந்து போகாமல் தவிர்க்கும் வகையில், வாணலியிலுள்ள சூப்பை இடைவிடாமல் கிளற வேண்டும். மேலும், தயாரிப்பு காலம் அதிகமாக இருந்த போதிலும், இதன் சுவையும், ஊட்டச்சத்தும் அதிகம்.
க்ளீட்டஸ்— ஆமாம், கோடைக்காலத்தில் இது ஒரு நல்ல உணவு வகையாகும். நேயர்களே நீங்கள் வீட்டில் தயாரித்து ருசிப்பாருங்கள்.