• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-02 18:55:35    
கிராம மகளிர் Gao Feng Lan

cri
Gao Feng Lan என்னும் பெண், உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்து Tong Liao நகரின் Ku Lun மாவட்டத்தின் San Jia Zi வட்டத்தில் வாழ்கின்றார். கடந்த பல ஆண்டுகளாக, வறுமையிலிருந்து விடுபடும் பொருட்டு, அவர் பல வழிமுறைகளை மேற்கொண்டார். இருப்பினும் வெற்றி பெறவில்லை. மாவட்டத்தின் மகளிர் சம்மேளனங்கள், பெண்கள் தொழில் நடத்துவதற்கு வழிகாட்டும் பிரச்சாரம் நடத்தி, வெளியூர்களில் அறிவியல் தொழில் நுட்பத்தைச் சார்ந்து, தோட்ட பயிரிடுதலை வளர்க்கும் முன்னேறிய செயல்பாடுகளை Gao Feng Lan அம்மையாரிடம் அறிமுகப்படுத்தின.

தாம் செல்வமடைவது குறித்து Gao Feng Lan அம்மையார் நம்பிக்கை கொண்டார். தமது வீட்டின் தோட்டத்தில், காய்கறிகளைப் பயிரிட அவர் தீர்மானித்தார். கடந்த பல ஆண்டுகளாக, கிராமத்தில் விவசாய குடும்பங்களின் தோட்டங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டன. கிராமவாசிகள், காய்கறிகளை வாங்க, கிராமச் சந்தைக்கு அல்லது மாவட்ட நகருக்கு செல்ல வேண்டியிருந்தது. இது வசதியாக இல்லை. இது மட்டுமல்ல, காய்கறிகள் புதியனவாக இல்லை. Gao Feng Lan அம்மையார், அறிவியல் தொழில் நுட்பம் தொடர்பான அதிக நூல்களை வாங்கி, தோட்டத்தில் சோதனை முறையில் பயிரிடுவதில் ஈடுபடத் துவங்கினார். முதல் இரண்டு ஆண்டுகாலத்தில், அவர் தோட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை காய்கறிகளைப் பயிர் செய்தார். ஆனால், அதிக பணம் சம்பாதிக்க முடியவில்லை. பயிரிடும் வழிமுறையை மேம்படுத்த வேண்டும் என்று அவர் நினைத்தார். தோட்ட பயிரிடுதல் பற்றி பல முறை ஆராய்ச்சி செய்த பின், ஓரெண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அவர் சுமார் 10 ஆயிரம் யுவானை முதலீடு செய்து, 0.5 Mu (15 Mu, ஒரு ஹெக்டருக்கு சமம்) பரப்பளவுடைய நிலத்தில், காய்கறி கூடாரத்தை உருவாக்கி, முழு ஆண்டும் பல முறை காய்கறிகளைப் பயிரிடுவதில் ஈடுபடத் துவங்கினார். இந்த சோதனைப் போக்கில், தோட்டப் பயிர் செய்கை தொடர்பான நூல்களை அவர் உணர்வுப்பூர்வமாகப் படித்தார். அவரது முயற்சிகளுடன், வசந்தக்காலத்தில், கூடாரத்தில் கத்தரிக்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளைப் பயிரிட்டதன் மூலம், Gao Feng Lan அம்மையார் மூவாயிரம் யுவான் வருமானத்தைப் பெற்றார்.
தோட்ட பயிரிடுதல் மூலம் Gao Feng Lan அம்மையார் நலனைப் பெற்றார். இதற்குப் பின், தோட்டத்தில் காய்கறிகளைப் பயிரிடுவதில் அவர் உற்சாகத்துடன் ஈடுபட்டார். வேளாண்மை ரீதியான இதழ்களைப் படித்ததைத் தவிர, நாள்தோறும் சீன மத்திய தொலைக்காட்சி நிலையத்தின் வேளாண்மை நிகழ்ச்சிகளை அவர் கண்டு ரசித்தார். அவர் தமது தோட்டத்தில், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வெள்ளை மக்காச்சோளத்தை சிறப்பாக பயிர் செய்தார். அவர் பயிரிட்ட வெள்ளை மக்காச்சோளம்,

சந்தையில் மிகவும் வரவேற்கப்பட்டது. 2500 வெள்ளை மக்காச்சோளங்களை விற்றதன் மூலம், அவர் 2500 யுவானை ஈட்டினார். கூடாரத்தில் பயிரிடப்படும் காய்கறிகள் மிகவும் வரவேற்கப்பட்டன. கூடாரத்துக்கு வெளியே பயிரிடப்படும் காய்கறிகளும் நன்றாக வளர்ந்தன. Gao Feng Lan அம்மையார் பயிர் செய்த சீனக்கோவா, வெள்ளைப்பூண்டு, உருளைக் கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அமோக விளைச்சல் தந்தன. இக்காய்கறிகளைப் பயிரிட்டதன் மூல வருமானம், 2800 யுவானை எட்டியது.
தோட்டத்தில் காய்கறி பயிரிடுதலில் தாம் பெற்ற அனுபவத்தைத் தொகுத்த பின், Gao Feng Lan அம்மையார், விளை நிலத்தில் பயிரிடுவதன் மீது கண்வைத்தார். அரசு நல்ல கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதால், விளை நிலத்தில் தானியம் பயிரிடுவதன் எதிர்காலம் ஒளிமயமானது. Gao Feng Lan அம்மையாரின் குடும்பம், சுமார் 70 Mu நிலப்பரப்புடைய விளை நிலத்தை கொள்கின்றது. இதில், சுமார் 50 Mu நிலப்பரப்புடைய விளை நிலத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. மொத்த விளைச்சல், 22 ஆயிரம் கிலோகிராமை எட்டியது. மக்காச்சோளம் பயிரிடுவதன் மூலமான அவரது ஆண்டு வருமானம், சுமார் 40 ஆயிரம் யுவானை எட்டியுள்ளது. தவிர, பயிரிடுதல் துறைக் கட்டமைப்புச் சீர்திருத்தப் போக்கில், Gao Feng Lan அம்மையார், 12 Mu நிலப்பரப்புடைய விளை நிலத்தில் சூரியகாந்தியைப் பயிரிட்டார். மொத்த விளைச்சல், சுமார் 1 ஆயிரத்து 500 கிலோகிராமாகும். இதன் மூலம், அவர் கூடுதலாக 10 ஆயிரம் யுவானை சம்பாதித்தார்.
Gao Feng Lan அம்மையார் பயிரிடுதல் துறையில் தேர்ச்சி பெற்றவர். இது மட்டுமல்ல, வளர்ப்புத் துறையிலும் அவர் திறமையாளர் ஆவார். அவர் பயிரிடும் காய்கறிகள், சோளத்தண்டுகள் முதலியவை, பன்றிகள் மற்றும் மாடுகளுக்கு தீவனமாக வழங்கக்கூடிய நல்ல உணவுப் பொருட்களாகும். ஆண்டுதோறும், Gao Feng Lan அம்மையார், 6 பன்றிகளை விற்கின்றார். இதன் மூலம் அவர் 5000 யுவான் வருமானம் பெற முடியும்.
கடினமாக உழைப்பது, அறிவியல் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்வது ஆகியவற்றால், Gao Feng Lan அம்மையார் செல்வமடைந்துள்ளார். இருந்த போதிலும் தமது நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களை அவர் மறக்கவில்லை. Gao Feng Lan அம்மையார் அவர்களுக்கு அடிக்கடி உதவுகின்றார். முழுமையாகாத புள்ளி விபரங்களின் படி, கடந்த பல ஆண்டுகளாக, வறிய குடும்பங்களுக்கு உதவி செய்ய, அவர் சுமார் 4000 யுவானை நன்கொடையாக வழங்கியுள்ளார்.