• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-31 16:36:17    
சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் சாதனை

cri
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, மகளிர் கால்பந்து உலக கோப்பை, உலக Formula 1 கார் பந்தயம் ஆகிய போட்டிகள் உலகின் உயர் நிலை போட்டிகள் என்ற தகுநிலையை எட்டியுள்ளன. கடந்த சில ஆண்டுகளில், சீனா இந்த போட்டிகளை நடத்தியுள்ளது. அவற்றின் ஏற்பாடு மற்றும் போட்டி நிலைகள் எமது மனங்களில் ஆழமாக பதிந்துள்ளன. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைப்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளுக்குள், சீன வீரர்கள் உலக விளையாட்டு அரங்கிற்கு மீண்டும் திரும்பியதிலிருந்து, 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட சர்வதேச செல்வாக்கு வாய்ந்த அதிகமான உலகத்திலேயே உயர் நிலையிலான போட்டிகள் சீனாவில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.

2008ம் ஆண்டு, 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவின் தலைநகரான பெய்சிங்கில் நடைபெற்றது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி உலகளவில் மிக பெரிய அளவிலான விளையாட்டு விழாவாகும். அதன் ஏற்பாடு மற்றும் ஆயத்த பணிகள் அனைத்து சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை விட மிக சிக்கலானது என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகள் விரிவான முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டு பணிகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Rogge வெகுவாக பாராட்டினார்.

இந்த போட்டியின் மூலம், பெய்சிங் உலகிற்கு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பிரம்மாண்டத்தை வெளிக்காட்டியதோடு, உலகம் பெய்சிங்கின் மகத்துவத்தையும் புரிந்துக் கொண்டுள்ளது. இது, உண்மையில் மிகவும் தலைசிறந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும் என்றார் அவர்.
சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைப்படுத்தப்பட்ட 30வது ஆண்டு நிறைவு 2008ம் ஆண்டாகும். 30 ஆண்டுகளுக்கு பின், சீனா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவது என்பது எதேச்சையான வெளிப்பாடு அல்ல. 30 ஆண்டுகளுக்கு முன், சீனா சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு

திறப்புப் பணியை நடைமுறைப்படுத்தியது. சீனாவின் பொருளாதாரம் உயர்வேக வளர்ச்சியைப் பெற்றது. நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றல் நாளுக்கு நாள் உயர்ந்தது. விளையாட்டுகளில் மக்களின் ஆர்வம் நாள் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாய் வளர்ந்து வருகின்றது. சீனாவின் ஒட்டுமொத்த ஆற்றலின் அதிகரிப்பால், உலகில் விளையாட்டில் பெரிய நாடாக சீனா உண்மையாக மாறியுள்ளது என்று சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வெற்றிக்கான பாராட்டு கூட்டத்தில் கூறினார்.
நாட்டின் வலிமையால், வெளிநாட்டு பணி உறுதியடைந்து வெற்றி பெற்றது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மற்றும் சோஷலிச நவீனமயமாக்கமாகக் கட்டுமானம் தொடர்ந்து முன்னேற்றப்படுவதுடன், உலக விளையாட்டு வல்லரசுகளின் ஒன்றாக சீனா மாறியுள்ளது என்றார் அவர்.