கடந்த ஆண்டு டிசம்பர் திங்களின் நடு பகுதி வரை, 228 நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள், 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்வதற்கு பதிவு செய்துள்ளன. இன்று, பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன வர்த்தக முன்னேற்றம் பற்றிய பணிக் கூட்டத்திலிருந்து கிடைத்த செய்தி இதை தெரிவித்தது.
உலகில், சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவாத 23 நாடுகளில், 14 நாடுகள் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளதாக சீனச் சர்வதேச வர்த்தக முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் Wang Jifei கூட்டத்தில் தெரிவித்தார்.
2010ம் ஆண்டு மே முதல் நாள் தொடக்கம், ஆகஸ்ட் 31ம் நாள் வரையான காலத்தில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறும். நகர வாழ்க்கையை மேலும் இன்பமாக மாற்றுவதே அதன் தலைப்பாகும்.
|