• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-05 11:46:37    
சீனப் பண்பாட்டுக் கண்ணோட்டம்

cri
பொருளாதார கணக்கெடுப்பு பணியில் நன்றாக ஈடுபட்டு, உரிய நேரத்தில் உள்ளபடியான நிலைமையை கற்றுத்தேர்ந்து, பொருளாதாரக் கொள்கைக்கு நம்பகமான ஆதாரணங்களை வழங்க வேண்டும். சீனத் துணைத் தலைமையமைச்சரும், சீனாவின் இரண்டாவது பொருளாதார கணக்கெடுப்பு தலைமைக் குழுவின் தலைவருமான likeqiang 4ம் நாள் பெய்ஜிங்கில் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வாண்டின் பொருளாதார கணக்கெடுப்பு, நாட்டின் நிலைமை மற்றும் ஆற்றல் மீதான கள ஆய்வாகும். பொருளாதாரத்தை வலுப்படுத்தி, தொழில் துறையின் கட்டமைப்பை சரிப்படுத்தி, தொலைநோக்குத் திட்டத்தை வகுப்பதற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பொருளாதார சீராக வளர்வதை நிலைநிறுத்தும் வகையில், உள்ளபடியான நிலைமையை தெரிந்துகொண்டு, வளர்ச்சிப்போக்கை அறிவியல் முறையில் ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதைப் பொறுத்தவரை, பொருளாதார கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன என்று அவர் கூறினார்.