• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-06 09:36:17    
சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 20வது கருத்தரங்கு

cri
டிசம்பர் 28ம் நாள் பேளுக்குறிச்சியில் நடைபெற்ற அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 20வது கருத்தரங்கை பற்றிய தகவல். எழுதியவர் பேளுக்குறிச்சி கே செந்தில்.
28.12.08 அன்று பேளுக்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 20வது கருத்தரங்கை பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது

இந்த கருத்தரங்கில் 172 நேயர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். முனைவர் திரு ந.கடிகாசலம், முனைவர் திரு சிவக்குமார், திரு இராஜராம், முனைவர் திருமதி விஜயலட்சுமி இராஜாராம் மற்றும் தமிழ்ப்பிரிவில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் திரு கிளிட்டஸ் இவர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டதால் கருத்தரங்கு சிறப்பாக அமைந்தது.

இறைவணக்கத்தை திரு R.M.மோகன் இராசிபுரம் பாடினார். திரு S.M.இரவிச்சந்திரன் சேந்தமங்லம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திரு க.செந்தில் பேளுக்குறிச்சி வ்ரவேற்று பேசினார். திரு செல்வம் வளவனுர் புதுப்பளையம் S.செல்வம் தலைமை உரையாற்றினார். திரு பல்லவி K பரமசிவன் பெருந்துறை மற்றும் திருமதி மு.வசந்தா Y.S.சைனாபாலு இராசிபுரம் சிறப்புறையற்றினார்கள்.

இந்த கருத்தரங்கில் தான் இதுவரை தமிழ்நாட்டிலிருந்து தமிழ்ப்பிரிவில் பணியாற்றிய அனைத்து நிபுனர்களும் கலந்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சீன வானொலி இயக்குனர் அவர்களின் வாழ்த்துரையை பாண்டிச்சேரி ராஜகோபால் படித்தார். தமிழ்பிரிவு தலைவி திருமதி கலையரசி அவர்களின் வாழ்த்துரையை திருமதி மு.வசந்தா Y.S.சைனாபாலு அவர்கள் படித்தார்.

நேயர்கள் தங்கள் மனதில் உள்ள தமிழ்பற்றையும் மற்றும் சீன தமிழ்பிரிவில் உள்ள நிறை குறைகளையும் பற்றியும் தங்களது கருத்துகளின் மூலம் தெரிவித்தனர். பல புதிய நேயர்களும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டது எனக்கு பெரு மகிழ்ச்சியை அளித்தது. சீன வானொலி மூலம் நல்ல நல்ல நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது மட்டுமல்லாமல் நேயர்களை ஊக்கப்படுத்தி பரிசுகள் வழங்கி வருடந்தோரும் கருத்தரங்கு நடத்துவது . இது போன்ற கருத்தரங்குகள் மூலம் நேயர்கள் அவர்களது கருத்தை வெளிப்படுத்துகிறார்கள். மற்றும் நேரில் பார்த்து தனது நண்பர்களுடன் உரையாடுகிறார்கள்.

ஒரு நேயர் நான் 9ம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு அதற்கு மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்புவதற்காகவே நான் கணிப்பொறியை கற்றேன் என்றார். இந்த வாய்ப்பை நான் அடைந்ததற்கு சீன வானொலியே காரணம் என்று அவர் கூறியது என் மனதை நெகிழ வைத்தது. கோவை ஆர் சின்னராஜ் பல வருடங்களுக்கு பின் கருத்தரங்கில் கலந்துக் கொள்கிறேன். அனைவரையும் மீண்டும் சந்தித்து உரையாடுவதற்கு வாய்ய்ப்பு கிடைத்து எனக் கூறினார் நேயர்களல்லாமல் கருத்தரங்கிற்கு வந்த சில புதிய நேயர்கள் கூட கருத்தரங்கைப் பார்த்துவிட்டு இந்த அளவிற்கு சீன வானொலி தமிழ்ப் பிரிவு சிறப்புடன் செயல்படுகிறதா என வியந்தனர்.

நேயர்களுடைய கேள்விகளுக்கு திரு கிளீட்டஸ், முனைவர் திரு ந.கடிகாசலம், முனைவர் திரு சிவக்குமார், திரு இராஜராம், ஆகியோர் பதில் சொன்னார்கள். நேயர்களுடன் நேயராக இணைந்து நண்பர்களாக மாறினார்கள்.
அவர்களுடையஅன்பை வெளிப்படுத்தினார்கள். திரு கிளீட்டஸ்அவர்களிடம்
நேயர்கள் விடுத்தசில கோரிக்களை சீன வானொலி தமிழ்ப்பிரிவு நிறைவேற்றும்மாறு
கேட்டுக்கொள்கிறேன்.

20வது கருத்தரங்கு நடத்த உதவியாகஇருந்தஅனைத்துநேயர்களுக்கும் மற்றும்
இறுதிவரை அமைதியுடன் இருந்து நிகழ்ச்சிகளை கேட்டு சிறப்பாக வழி நடத்திய அனைத்து நேயர்களுக்கும் எனது நன்றியைத்தெரிவித்துக்
கொள்கிறோன்.

இறுதியாக திரு R.சுப்பிரமணி 30,பள்ளிப்பட்டி நன்றியுரயும், திரு கா.அருண் மீனாட்சி பாளையம் பாடினார். விழா இனிதாக நிறைவடைந்தது.

என்றும் அன்புடன்
க.செந்தில் பேளுக்குறிச்சி