அடுத்த ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறும். உலகப் பொருட்காட்சியின் பொருட்கள் தடையின்றி சீனாவில் நுழைவதற்கு, ஷாங்காய் மாநகரச் சுங்கத் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உத்தரவாதம் செய்துள்ளது. சீன சுங்கத் துறையின் தலைமை அலுவலகம் 7ம் நாள் இத்தகவலை வெளியிட்டது.
உலகப் பொருட்காட்சியின் பொருட்கள் தடையின்றி சீனாவில் நுழைவதற்காக, ஷாங்காய் மாநகர சுங்கத் துறை சிறப்பு பாதையை திறந்து வந்துள்ளது. தவிர, உலகப் பொருட்காட்சியின் போது வரியை குறைப்பது உள்ளிட்ட சலுகை கொள்கைகளின் பரிசீலனை மற்றும் நடைமுறையாக்கத்துக்கு சிறப்புப் பணியாளர்கள் அமர்த்தப்படுவர்.
|