• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-07 09:50:08    
அளவுக்கு மீறிய ஆசை

cri
ச்சி நாட்டை வெய் மன்னர் ஆட்சி புரிந்தபோது, அவரது ஆட்சியின் எட்டாவது ஆண்டில் ச்சு நாட்டு படைகள் தாக்குதல் தொடுத்தன. ஷாவ் நாட்டிலிருந்து படைபல உதவி பெற எண்ணிய மன்னர் வெய், இதற்காக ச்சுன்யுகுன்னை தூதனுப்ப முடிவெடுத்தார். ச்சுன்யுகுன் மன்னர் வெய்யின் சார்பில் ஷாவ் நாட்டுக்குச் சென்று ச்சு நாட்டு படைகளுக்கு எதிரான போருக்கு உதவி கேட்கவேண்டும் என்பதே திட்டம். உதவி கேட்டு செல்வதாயிருந்தாலும், வெறுங்கையாய் செல்வது முறையல்ல என்பதால், 50 கிலோ தங்கமும், நான்கு குதிரைகளால் செலுத்தப்படும் குதிரை வண்டிகள் பத்தும் கொடுத்தனுப்ப நினைத்தார் மன்னர் வெய்.
இதை கேட்ட ச்சுன்யுகுன் தலையிலிருந்த தொப்பியின் அலங்காரத்திரிகள் அறுந்துவிழும் அளவுக்கு சிரித்தான். இதைக் கண்ட மன்னர் வெய், இந்த அன்பளிப்புகள் மிக சொற்பமானதாக இருப்பதாய் நினைக்கிறீரா என்று கேட்டான். அதற்கு ச்சுன்யுகுன், மன்னா, அப்படி ஒரு எண்ணம் மேலிட எனக்கு எப்படி துணிச்சல் எழும் என்று பதிலளிக்க, பிறகு ஏன் நீர் சிரித்தீர் என்று கேட்டார் மன்னர் வெய்.
ச்சுன்யுகுன் பொறுமையாக, மன்னா, இன்று நான் கிழக்கு பகுதியிலிருந்து அரசவை நோக்கி வந்துகொண்டிருக்கும்போது, ஒரு மனிதர் வானத்தை நோக்கி கடவுளை தொழுது கொண்டிருந்ததைக் கண்டேன். சாலையோரத்தில் நின்றபடி, தனது நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கவேண்டும் என்று அந்த மனிதன் வேண்டிக்கொண்டிருந்தான். கடவுளுக்கு அர்ப்பணிக்க ஒரு கையில் பனிறியின் கால் ஒன்றையும் மறு கையில் மதுச்சாடி ஒன்றையும் ஏந்தியிருந்தான் அந்த மனிதன். குறுகிய பிந்த நீண்ட வயல்வெளிகள் முகடு வரை செழிப்பாய் விளையந்து பல கூடைகள் நிறைய தானியம் கிடைக்கவேண்டும், சம்நிலமாய் உள்ள பகுதிகளின் விளைச்சல் வண்டி வணியாய் கிடைக்கவேண்டும், உணவு தானியங்கள் கொழிக்கவேண்டும், என் வீடு தானியங்களால் நிரம்பவேண்டும் என்று கடவுளை நோக்கி மன்றாடினான். அவன் கடவுளுக்கு அர்ப்பணித்த பொருட்களோ சொற்பமானவை அற்பமானவை ஆனால் அவனது கோரிக்கையோ அளவுக்கு அதிகமாய், இதைக் கண்ட எனக்கு சிரிப்பதை தவிர வேறெதும் தோன்றவில்லை என்று கூறினான்.
ச்சுன்யுகுன் கூறியதைக் கேட்ட மன்னர் வெய், அவர் சொல்ல வந்த கருத்தை புரிந்தவராய், ஷாவ் நாட்டுக்கு அனுப்ப எண்ணிய அன்பளிப்பை வெண்ணிற வெண்மணிக்கல் மாலைகள் 10 சோடியும், குதிரை வணிகளின் எண்ணிக்கை 10க்கு பதிலாய் 100ஆகவும் கூடுதலாக்கி ச்சுன்யுகுன்னை தூதனுப்பினான். ச்சுன்யுகுன் ஷாவ் நாடு சென்று அன்பளிப்பை ஒப்படைத்து மன்னர் வெய்யின் சார்பில் படைபல உதவியளிக்க ஷாவ் நாட்டு மன்னரை வேண்டினான். ஷாவ் நாட்டு மன்னர் ஒரு லட்சம் நல்ல போர் பயிற்சி பெற்ற வீரர்களையும், ஆயிரம் ரதங்களையும் அனுப்பிவைத்தான். இச்சேதியறிந்த ச்சு நாட்டினர், இரவோடு இரவாக ச்சி நாடிலிருந்து தமது படைகளை பின்வலித்துக்கொண்டனர்.