• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-07 16:24:33    
தாகார் வாகன ஓட்ட போட்டி

cri
2009ம் ஆண்டு தாகார் வாகன ஓட்ட போட்டி உள்ளூர் நேரப்படி 4ம் நாள் 2வது நாளாக நடைபெற்றது. அன்றைய நெறி, அர்ஜென்டீனாவின் லா பம்பா மாநிலத்தின்

சன்த ரோசாவிலிருந்து, நெகுன் மாநிலத்தின் புர்து மாதுரன் வரை இருந்தது. அதன் நீளம் 837 கிலோமீட்டராகும். சிறப்பு நெறியின் நீளம் 237 கிலோமீட்டராகும். கடும் வெயில் காலநிலை மற்றும் சிரமமான நெறி ஆகியவை, வீரர்களின் உடலாற்றலையும் தொழில் நுட்ப திறனையும் சோதனை செய்தது. இப்போட்டியில் கார் மற்றும் மோட்டார் மைக் ஆகிய இரண்டும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் வாகன பிரிவில், KTM அணியின் நெதர்லாந்து வீரர் வெர்ஹோவன், 2 மணி 14 நிமிடம் 48 வினாடி என்ற சாதனையை கொண்டு, முதலில் போட்டியை முடிவடைந்தார். 2வது நாளான போட்டிகள் முடிவடைந்த பின், ஸ்பெனிய வீரர்

கோமா 5 மணி 13 நிமிடம் 32 வினாடி என்ற பொது சாதனையை கொண்டு, தரவரிசையின் முதலிடத்தில் வகிக்கின்றார். வாகன பிரிவில், வோகஸ் வெய்கன் Volkswagen அணியின் வீரர் சன்ஜ், 1 மணி 56 நிமிடம் 14 வினாடி என்ற சாதனையை கொண்டு, முதலில் போட்டியை முடித்தார்.
சீன ஆடவர் கூடைப்பந்து அணிகளுக்கிடையிலான போட்டியின் 22வது சுற்றில் 9 ஆட்டங்கள், 4ம் நாளிரவு நடைபெற்றன. இச்சுற்று போட்டியின் 9 ஆட்டங்களில் 6 உபசரிப்பு அணிகள் வெற்றிகளை பெற்றன.
தரவரிசையில் முதலிடத்தில் வகிக்கின்ற சின் சியாங் அணி, 96-90 என்ற புள்ளிக்கணக்கில் சன் தூங் அணியை தோற்கடித்தது. இது கடந்த 7 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது. பெய்ஜிங் அணி, 108-89 என்ற

புள்ளிக்கணக்கில் ஜீ லின் அணியை தோற்கடித்தது. உபசரிப்பு அணியான ஜியாங் சு அணி, 95-104 என்ற புள்ளிக்கணக்கில் குவாங் துங் அணியிடம் தோல்வியடைந்தது.
பெய்ஜிங் நேரப்படி 5ம் நாள் விடியற்காலை, 2008 2009ம் ஆண்டு இங்கிலாந்து ஃபா கோப்பை அரை இறுதிப்போட்டி நடைபெற்றது. MANCHESTER UNITED அணி, 3-0 என்ற கோல்கணக்கில் SOUTHAMPTON அணியை தோற்கடித்தது.
அதே நாள் விடியற்காலையிலும் 2008 2009ம் ஆண்டு ஸ்பானிய கால்பந்து அணிகளுக்கிடைபோட்டி தொடர்ந்து நடைபெற்றது. REAL MADRID அணி, 1-0 என்ற கோல்கணக்கில் VILLARREAL அணியை தோற்கடித்து, தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றுள்ளது.