
Ha erbin நகரில் ஒரு அழகான நகராகும். குறிப்பாக, குளிர்காலத்தில் அங்கு பனிச்சறுக்கு விளையாட்டு ஒரு சிறந்த தெரிவாகும் என்று கூறலாம். கடந்த 6 ஆண்டுகளில், உறைபனி மைதானங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. அளவில் பெரிய, வசதியான இம்மைதானங்களில் சிறந்த சேவையை அனுபவிக்கலாம்.
Ha erbin நகரில், அக்டோபர் திங்கள் துவக்கம் முதல், சில முறை பனி பெய்தது. இப்போது நிலத்தில் அடர்ந்த உறைபனி காணப்படுகின்றது. வெண்ணிற உலகம் போல் தோன்றுகின்றது. அங்கு காணப்படும் அழகிய இயற்கைக் காட்சிகள் பல பயணிகளை ஈர்த்துள்ளன. இதையொட்டி, பனிச்சறுக்கில் ஈடுபட விரும்புவோர் பலர், இந்நகரின் சுற்றுப்புறத்திலுள்ள உறைபனி மைதானங்களுக்குச் செல்கின்றனர்.
தற்போது, Ha erbin நகரின் சுற்றுப்புறத்தில், 40க்கும் அதிகமான சிறிய, பெரிய உறைபனி மைதானங்கள் உள்ளன. இவற்றில் பெயுன் சர்வதேச உறைபனி மைதானம் மிகவும் பெரியது. இம்மைதானத்தின் பரப்பளவு, 5 லட்சம் சதுரமீட்டருக்கும் அதிகமாகும். இதில், துவக்க நிலை, நடுத்தர நிலை மற்றும் உயர் நிலை சறுக்கல் பாதைகள் உள்ளன.
|