• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-09 13:47:43    
உய்கூர் இனத்தின் விழாக்கள்

cri
Rou zi, gu er bang, nuo lu zi விழாக்கள், உய்கூர் இன மக்களின் பாரம்பரிய விழாக்களாகும். முதல் 2 விழாக்கள், இஸ்லாமிய மதத்திலிருந்து தோன்றிய திருவிழாகளாகும். ஹூய் இன நாள் காட்டின்படி, இவ்விழாக்கள் ஒவ்வொரு ஆண்டிலும் வேறுபட்ட நாட்களில் கொண்டாடப்படுகின்றன.

விழாக்களின் போது, உய்கூர் இன மக்கள், mai xi lai fu என்ற பாடல் விருந்து உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை நடத்துகின்றனர்.

Rou zi விழா

ஒரு திங்கள் காலம் உண்ணாவிரதம் முடித்த நாள், Rou zi விழாவாகும். இது, kaizhai விழா எனவும் கூறப்படுகிறது. kaizhai என்பது உண்ணாவிரதம் முடிந்தது என்று பொருட்படுகிறது. அவ்விழாவின் போது, வயது வந்தோர் மசூதிகளுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். இஸ்லாம் மத நம்பிக்கை கொண்டவர்கள் மசூதிகளில் கூடி பிரமாண்டமான வழிபாடு செய்கின்றனர். இசை கலைஞர்கள், மசூதிகளின் வாயிலில் உட்கார்ந்து, மேளம் அடித்து இசைக்கருவிகளை இசைக்கின்றனர். முஸ்லிம்கள் நண்பர்கள் அண்டைவீட்டுக்காரர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டுக்கு சென்று அன்பளிப்பு அளிக்கின்றனர். குதிரைப் போட்டி, ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் முதலிய நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. அனைவரும் விளையாடி மகிழ்ந்து 3 நாட்களாக இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர்.

gu er bang விழா

gu er bang விழா, புனித நூலின்படி கால்நடை பலிகொடுக்கப்பட்ட நிகழ்வை நினைவு கூர்கின்ற விழாவாகும். Rou zi விழா கொண்டாடப்பட்ட 70ம் நாளில், இவ்விழா தொடங்கி, 3 நாட்கள் நீடிக்கிறது. வசதியான குடும்பங்கள் ஆட்டை வெட்டி விருந்து ஏறஅபாடு செய்கின்றனர். விழாவுக்கு முன், ஒவ்வொரு குடும்பமும் வீடுகளை துப்புரவு செய்கின்றன. விழா நாளின் அதிகாலையில், உய்கூர் இன மக்கள் மசூதிகளுக்கு சென்று வழிபாடு செய்து, கால்நடைகள் பலிகொடுக்கப்படுகின்ற சம்பவத்தை விழாவை பார்கின்றனர்.

கொல்லப்பட்ட கால்நடைகளை விற்க கூடாது. விதிகள்படி மசூதிகள் மற்றும் மத பணியாளருக்கு வழங்கிய பின், ஏனைய இறைச்சி விருந்தினர் மற்றும் உறவினர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

விழாவின் போது, அனைவரும் சதுக்கத்தில் mai xi lai fu என்ற பாடல் விருந்து நடத்தி, இசையில் நடனம் ஆடி மகிழ்கின்றனர்.