• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-09 09:35:57    
திபெத் இன மூதாட்டி துன்ச்சுச்சோமாவின் இன்பமான வாழ்க்கை

cri
திபெத் இன மூதாட்டி துன்ச்சுச்சோமாவின் இன்பமான வாழ்க்கை பற்றிக் கூறுகின்றோம்.
யுன்னான் மாநிலத்தின் தி சிங் திபெத் இனத் தன்னாட்சி சோவின் தலைநகர் சியாங்கேலிலா மாவட்ட அரசு அமைந்துள்ள இடமாகும். இதன் தான் சேங் சதுக்கத்தில், ஒவ்வொரு இரவும் மக்கள் நிறைந்து காணப்படுகின்றனர். மகிழ்ச்சி தரக் கூடிய இசையை கேட்டு ரசித்து அருமையான நடனத்தை அவர்கள் ஆடுவதை நாம் கண்டு களிக்கலாம். உள்ளூர் மக்கள் இரவு உணவுக்குப் பின் அங்கே கோச்சுவாங் என்ற நடனமாடுவது வழக்கம். மகிழ்ச்சியான சூழ்நிலையில் அனைவரும் இனிமையான புன்னகையுடன் காணப்படுகின்றனர்.

சியாங்கேலிலா மாவட்டத்தின் ஜியன்தாங் வட்டத்தில் வாழும் திபெத் இன மூதாட்டி துன்ச்சுச்சோமா அவ்வபோது இங்கே வந்து கோச்சுவாங் நடனமாடுவார். இவ்வாண்டு 66 வயதான அவர் உடல் நலத்துடன் இருக்கிறார். தமது தற்போதைய வாழ்க்கை பற்றி பேசுகையில் அவரது முகம் மலர்கிறது. கடந்த காலத்தில் கடின வாழ்க்கையை அனுபவித்த அவர் தற்போதைய இன்பமான வாழ்க்கையை மிகவும் பேணிமதிக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது—
"முன்பு, உணவு, உடை, உறைவிடம் ஆகிய வசதிகளைப் பெறுவது கடினமானது. வசிப்பிடம் பன்றிப்பட்டியைப் போல் இருந்தது. சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த பின், நல்ல கொள்கை மேற்கொள்ளப்பட்டு, இன்பமான வாழ்க்கை ஏற்பட்டுள்ளது. பன்றி மற்றும் மாடுகளை வளர்ப்பது வயலில் பயிரிடுவது ஆகியவற்றுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. தற்போது அனைவரும் செல்வமடைந்துள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. முன்பு இத்தகைய பராமரிப்பு நடவடிக்கைகள் ஏதும் இல்லை. விடுதலை பெறுவதற்கு முந்தைய சமூகத்தில் யாரும் உங்களுக்கு பராமரிப்பு வழங்கவில்லை" என்றார் அவர்.
நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, திபெத் இன மூதாட்டி துன்ச்சுச்சோமா பாடிய பெய்ஜிங்கிலுள்ள பொன் மலையில் என்ற பாடலாகும். பெய்ஜிங்கிலுள்ள பொன் மலையில் சூரிய ஒளி வீசுகிறது. அரசுத் தலைவர் மா சே துங் பொன் நிற சூரியன் போல் திகழ்கிறார். விடுதலை பெற்ற அடிமைகளின் மனம் அவரது அன்பினால் ஒளிமயமானது என்று இப்பாடல் வர்ணிக்கிறது. இப்பாடல் தாம் மிகவும் விரும்பும் பாடலாகும் என்று மூதாட்டி துன்ச்சுச்சோமா கூறினார்.

அவரது வீட்டின் வரவேற்பு அறையில் சிறிய கோயில் ஒன்று உள்ளது. அதன் மேல் 10வது பெசான் மற்றும் முன்னாள் அரசுத் தலைவர் மா சே துங்கின் நிழற்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. திபெத் இன மக்களின் வீடுகளில் பொதுவாக இத்தகைய வீட்டுக் கோயில் காணப்படுகிறது. முன்னாள் அரசுத் தலைவர் மா சே துங் அவர்கள் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் திபெத் மக்கள் விடுதலை பெற்று, இன்பமான வாழ்க்கை நடத்துகின்றனர். திபெத் மக்களின் மனதில் மா சே துங் அவர்கள் வாழும் புத்தர் போல் உன்னத தகுநிலை வகிக்கிறார். எதிர்கால வாழ்க்கை மேலும் அருமையாக இருக்க ஒவ்வொரு நாளும் மக்கள் வழிபாடு செய்கின்றனர் என்று மூதாட்டி துன்ச்சுச்சோமா கூறினார்.

"தற்போது கட்சியின் மதக் கொள்கை நன்றாக இருக்கிறது. திபெத் மக்களின் மத நம்பிக்கை சுதந்திரமாகும். மா சே துங் அவர்கள் எங்களுக்கு புதிய வாழ்க்கையைக் கொண்டு தந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நாங்கள் இன்பமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறோம்" என்றார் அவர்.
45 வயதான லொசாங்ச்சோமா மூதாட்டி துன்ச்சுச்சோமாவின் மூத்த மகள். தனது தாயைப் பேட்டி கண்ட செய்தியாளர்கள் பெய்ஜிங்கிலிருந்து வந்ததை அறிந்து கொண்டு அவர் உணர்ச்சிவசப்பட்டார். அவரது கடைசி மகள் பெய்ஜிங் மத்திய தேசிய இன பல்கலைக்கழகத்தின் திபெத் மொழித் துறையில் கல்வி பயின்று வருகிறார். செய்தியாளர்கள் பெய்ஜிங்கிலிருந்து வந்த தகவலைக் கேள்விப்பட்டதும், தூரத்திலுள்ள மகளை அவர் நினைவு கூர்ந்தார். தனது மகள் இன்பமாக வாழ்கிறார். நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கில் உயர் நிலை கல்வியைப் பெறுவது என்பது முன்பு நினைக்க முடியாத விடயமாகும் என்றார் அவர்.

தற்போதைய வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுகையில் லொசாங்ச்சோமா மனநிறைவு அடைகிறார். அவரது கணவர் பெரிய லாரி ஒன்றை வாங்கினார். அடிக்கடி குன் மிங் நகருக்குச் சென்று பொருட்களை ஏற்றிச் செல்லும் அவர் திங்களுக்கு 4000 யுவானுக்கு மேல் சம்பாதிக்கலாம். லொசாங்ச்சோமா வீட்டில் தங்கி, பார்லி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை பயிரிட்டு, யாக் எருதுகளை வளர்த்து, காளான்களைப் பறித்தெடுக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் சியங்கேலிலாவுக்கு வந்து சுற்றுப் பயணம் மேற்கொண்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீட்டில் சொந்தமாக தயாரித்த நெய் உள்ளிட்ட சிறப்பு உள்ளூர் பொருட்களை பயணிகளுக்கு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் லொசாங்ச்சோமாவின் குடும்பம் புதிய கட்டிடத்தைக் கட்டியமைத்து, புதிய வீட்டு சாமான்கள் பலவற்றை வாங்கியது. லொசாங்ச்சோமா மகிழ்ச்சியுடன் கூறியதாவது—
"தற்போதைய வாழ்க்கை மிகவும் இன்பமாக உள்ளது. மிகவும் நல்லது. ஓரளவு சொகுசான வாழ்க்கை நிலையை எட்டியுள்ளது. தொலைகாட்சிப் பெட்டி, குளிர் சாதனப் பெட்டி, மின் காந்த அடுப்பு, மின் சமைகலன், சூரிய வெப்ப ஆற்றல் முதலியவை உள்ளன. இரண்டு மகள்களுக்கு இரண்டு கணினிகள் உண்டு" என்றார் அவர்.

மூதாட்டி துன்ச்சுச்சோமாவின் பேரன் தன்ச்சேங்சிலின், பெய்ஜிங் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். அண்மையில் படிப்பை முடித்து பட்டம் பெற்ற அவர் சொந்த ஊருக்குத் திரும்பினார். நல்ல கட்டான உடல் கொண்ட அவர் தெளிந்த பண்பு நலன்களைக் கொண்டுள்ளார். அவர் பேசுகையில், தற்போது சொந்த ஊரில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. திபெத் இன குழந்தைகள் பலர் பல்கலைக்கழகத்தில் நுழைந்து கல்வி பயில்கின்றனர் என்று கூறினார். பெய்ஜிங் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் அவர் வெற்றி பெற்றமை சொந்த ஊரில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவரது தங்கை சீன மத்திய தேசிய இன பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார். அனைவரும் இது பற்றி பெருமை அடைந்தனர்.
பல பல்கலைக்கழக மாணவர்களை வளர்த்த மூதாட்டி துன்ச்சுச்சோமாவின் குடும்பம் ஊரில் மிகவும் புகழ்பெற்றது. அவர் பேசுகையில், தற்போது நாட்டின் கொள்கை நன்றாக உள்ளது. பொது மக்களின் வாழ்க்கை மென்மேலும் அமைதியாகவும் இன்பமாகவும் இருக்கிறது என்று கூறினார். போதலா மாளிகைக்குச் சென்று புனிதப்பயணம் மேற்கொள்வது என்பது திபெத் மக்களின் மிகப் பெரிய ஆர்வமும் குடும்பத்தினரின் கனவும் ஆகும். இந்த கனவு தனது தலைமுறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் தாம் ஆறுதலையும் பெருமையையும் உணர்ந்துள்ளதாக அவர் கூறினார்.