திபெத் பண்ணை அடிமைகள் விடுதலை பெற்ற நினைவு நாள்
cri
திபெத்தில் பத்து இலட்சம் பண்ணை அடிமைகள் விடுதலை பெற்றதை கொண்டாடும் வகையில், நினைவு நாளை அமைப்பது பற்றிய கருத்துருவை, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் 9வது மக்கள் பேரவையின் 2வது கூட்டம் பரிசீலனை செய்யும். இவ்வாண்டு திபெத் ஜனநாயக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 50வது நினைவு ஆண்டாகும். 50 ஆண்டுகளுக்கு முன், திபெத்திலான பத்து இலட்சம் பண்ணை அடிமைகள் ஜனநாயக சீர்திருத்தம் மூலம் நாட்டின் உரிமையாளராக மாறினர். திபெத் மக்கள் உள்ளிட்ட சீன மக்கள் அனைவரும் இந்த வரலாற்று முக்கியத்துவ நிகழ்ச்சியை நினைவில் கொள்ள வேண்டும் என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைமைச் செயலாளர் pang bo yong கூறினார். திபெத்தை தாய்நாட்டிலிருந்து பிளவுப்படுத்த தலாய் லாமா குழு முயற்சி செய்வது என்பது, திபெத் இடைவிடாமல் வளர்ந்து வருவது என்ற உண்மைக்கும் திபெத் மக்களின் விருப்பத்துக்கும் புறம்பானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
|
|