• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-12 16:36:18    
பெய்ஜிங் தொல் பொருட்களுக்கான செப்பனிடுதல் மற்றும் பாதுகாப்பு

cri
2008ம் ஆண்டு முதல், அடுத்த 8 ஆண்டுகாலத்தில், தொல் பொருட்களுக்கான செப்பனிடுதல், பாதுகாப்புப் பயன்பாட்டு இடைக்கால மற்றும் நீண்ட கால வளர்ச்சித் திட்டங்களுக்கு, 120 கோடி யுவானை பெய்ஜிங் மாநகரம் ஒதுக்கிவைத்து வருகிறது.

இடைக்கால மற்றும் நீண்ட கால இந்த வளர்ச்சித் திட்டங்கள் மேலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதோடு, புகழ் பெற்ற வரலாற்று மாநகரமான பெய்ஜிங் மாநகரின் தொல் பொருட்கள் பாதுகாப்பு நிலைமை, வரலாற்றில் மிகவும் உயரமாகும். தொல் பொருட்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்ற அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் பொதுவாக இந்த கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் புகழ் பெற்ற பெருஞ்சுவர், அரண் மனை அருங்காட்சியகம், சொர்க்க கோயில் உள்ளிட்ட 6 வரலாற்று சிறப்பும் அழகு வாய்ந்த 6 காட்சிகள், சுமார் மூவாயிரத்து 500 பெயர முடியாத வரலாற்றுச் சின்னங்கள் வனப்பு நிறைந்த இயற்கைக் காட்சி இடங்கள் பெய்ஜிங் மாநகரில் இடம் பெறுகின்றன. முன்பு, பொருளாதார காரணம் மற்றும் பன்நோக்க காரணிகளால், பெய்ஜிங் மாநகரின் தொல் பொருட்களின் கட்டிடங்களுக்கான பாதுகாப்பு ஒதுக்கீட்டுத் தொகை குறைவு. 2000 முதல் 2007ம் ஆண்டு வரை, 33 கோடி யுவான் மதிப்புள்ள தொல் பொருட்களின் பாதுகாப்புத் திட்டம், மனித வள ஒலிம்பிக்கான தொல் பொருட்களின் பாதுகாப்புத் திட்டம் போன்ற திட்டங்களை பெய்ஜிங் மாநகரம் நடைமுறைப்படுத்தியுள்ளது. பெய்ஜிங் அரசு 93 கோடி யுவானை ஒதுக்கிவைத்து, 600 கோடி யுவான் சமூக முதலீடுகளோடு, தொல் பொருட்களின் கட்டிடங்களை மறுசீரமைத்து வருகிறது. இந்த இரண்டு திட்டங்களில், சுமார் 140 தொல் பொருட்களின் கட்டிடங்கள் புனரைமைப்பப்பட்டுள்ளன.

நண்பர்களே, பெய்ஜிங் தொல் பொருள் செப்பனிடுதல் மற்றும் பாதுகாப்பு என்ற தகவலை அறிந்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.