• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-12 10:01:15    
2009 கத்தார் டென்னிஸ் போட்டி

cri

10 இலட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசை கொண்ட அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய 2009ம் ஆண்டு கத்தார் டென்னிஸ் போட்டி 6ம் நாள் கத்தார் தலைநகர் தொகா நகரில் துவங்கியது. அன்று நடைபெற்ற போட்டியில் இப்போட்டியின் வீரர்களின் தரவரிசையில் 4வது இடம் பெறும் அமெரிக்காவின் வீரர் ரோதிக், 5வது இடம் பெறும் பிரேன்ஸின் வீரர் முன்பில்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுப் போட்டியில் நுழைந்தனர். உலக தரவரிசையில் முதலிடத்தை வகிக்கின்ற ஸ்பானிய வீரர் நாடால் ஆடவர் இரட்டையர் போட்டியில் கலந்துகொண்டு, வெற்றி பெற்றார்.

2009ம் ஆண்டு ஸ்னுகர் சாம்பியன் பட்ட தொடர்போட்டி, பெய்ஜிங் நேரப்படி 6ம் நாள் பிரிட்டன் ஏசேக்ஸ் நகரில் துவங்கியது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த பின், சீன வீரர் தின் ஜுன் ஹுய், 3-1 என்ற ஆட்டக்கணக்கில் இங்கிலாந்து வீரர்கள் பேரி, மோபே, ஸ்காட்லந்து வீரர் ஹன்ஜுர் ஆகியோரை தோற்கடித்தார். அவர் இங்கிலாந்து வீரர் சேர்பியுடன் சமம் செய்தார். 3 வெற்றிகள் 1 சம நிலை என்ற சாதனையை கொண்டு குழுவின் முதலிடத்தில் வகிக்கின்றார். அடுத்த சுற்றுப் போட்டியில் நுழையும் வாய்ப்பை அவர் பெற்றார்.
புதிய போட்டியாற்றல் கொண்ட தரவரிசையை 6ம் நாள் NBA ஒன்றியம் வெளியிட்டது. சீனாவின் வீரர் யாவ் மின் விளையாடுகின்ற HOUSTON ROCKETS அணி, 3 இடங்கள் கீழிறங்கி, 13வது இடத்தை வகிக்கின்றது. இதர சீன வீரர் யி சியன் லியன் விளையாடுகின்ற NEW JERSEY NETS அணி, ஒரு தரம் இறங்கி, 17வது இடத்தில் உள்ளது.
சீனாவின் வீரர் சுன் யு விளையாடுகின்ற LOS ANGELES LAKERS
அணி, இத்தரவரிசையின் முதலிடத்தில் வகிக்கின்றது.

சீன ஆடவர் கூடைப்பந்து அணிகளுக்கிடையிலான போட்டியின் 22வது சுற்றில் 9 ஆட்டங்கள், 4ம் நாளிரவு நடைபெற்றன. இச்சுற்று போட்டியின் 9 ஆட்டங்களில் 6 உபசரிப்பு அணிகள் வெற்றிகளை பெற்றன.
தரவரிசையில் முதலிடத்தில் வகிக்கின்ற சின் சியாங் அணி, 96-90 என்ற புள்ளிக்கணக்கில் சன் தூங் அணியை தோற்கடித்தது. இது கடந்த 7 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது. பெய்ஜிங் அணி, 108-89 என்ற புள்ளிக்கணக்கில் ஜீ லின் அணியை தோற்கடித்தது. உபசரிப்பு அணியான ஜியாங் சு அணி, 95-104 என்ற புள்ளிக்கணக்கில் குவாங் துங் அணியிடம் தோல்வியடைந்தது.