• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-13 17:21:56    
ஷி ச்சி லின் தோட்டம்

cri

சூ ச்சோவில் புகழ்பெற்ற 4 தோட்டங்களில் ஒன்றான ஷி ச்சி லின் தோட்டம், அந்நகரின் வடக்கிழக்குப் பகுதியில் உள்ளது. அது, 1342ம் ஆண்டு கட்டியமைக்கப்பட்டது. இத்தோட்டத்தில் கற்பாறைகளின் வடிவம், சிங்கம் போன்று உள்ளதால், அது ஷி ச்சி லின் என அழைக்கப்படுகிறது. சீன மொழியில் ஷி ச்சி என்றால் தமிழில் சிங்கம் என்று பொருட்படுகிறது.

அதன் மட்டம், செங்கோன வடிவமாக இருக்கிறது. அதன் பரப்பளவு, சுமார் 1.1 ஹெக்டராகும். அதன் ஏரியிலுள்ள கற்கள் மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட வேலைப்பாடுகள், அழகாக இருக்கின்றன. அது, சீனாவில் மிகப் பழங்கால தொன்மையுடைய பாறையில் செதுக்கப்பட்ட சிற்பக்கலைகளைக் கொள்கிறது. அது, பாறை சிற்பக்கலை அரசாங்கம் எனவும் பாராட்டப்படுகிறது. முன்பு, அது கோயிலுக்குப் பின்புறமுள்ள பூங்கா ஆகியதால், அங்குள்ள பாறைகளிலான வேலைப்பாடுகள், புத்தர் சின்னங்களாக அமைகின்றன எனவே சாதாரண பாறைகளில் செதுக்கப்படும் வேலைப்பாடுகளை விட, வேறுப்படுகின்றன.

அங்குள்ள கட்டிடங்கள், ஒழுங்காக அமைந்துள்ளன. Yanyu மண்டபம், Jianshan மாளிகை, Feipu விதான மண்டபம் முதலியவை, அங்குள்ள முக்கிய கட்டிடங்கள் ஆகும்.

இத்தோட்டம் வடிவமைக்கப்பட்ட முறை அழகாக இருக்கின்றன. அங்குள்ள பாறைகளில் செதுக்கப்பட்ட வேலைப்பாடுகள், குகைகள், தனிச்சிறப்பு வாய்ந்தவை.

2006ம் ஆண்டு மே 25ம் நாள், அது, யுவான் வம்சக்காலத்தில் பழங்காலக் கட்டிடம் என்ற பெயரில், சீன அரசவையால் 6வது தொகுதி முக்கியத் தொல்பொருள் பிரிவில் சேர்க்கப்பட்டது.