• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-13 10:43:45    
இன்னொரு சுவையான சீன உணவு வகை

cri

வாணி – இன்று வாணி, க்ளீட்டஸ் இருவரும் இன்னொரு சுவையான சீன உணவு வகை பற்றி தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.  தமிழகத்தைப் போல, சீனாவின் தெற்கு பகுதியில் ஆண்டு முழுவதும் பல்வகை பசுமையான பழங்கள் கிடைக்கலாம். நேரடியாக சாப்பிடுவதை தவிர, அவற்றை சூப் அல்லது உணவு வகைகளை தயாரிப்பதில் பலர் பயன்படுத்துகின்றனர்.

க்ளீட்டஸ் – ஆமாம், பழங்களை உணவு வகைகளில் பயன்படுத்தினால், உணவு வகைகளின் நிறங்களை அதிகரிக்கும் அதேவேளையில், தனிச்சிறப்பான சுவையையும் ஏற்படுத்தலாம். வாணி – இன்றைய உணவு வகையில் அன்னாசிப்பழம் இடம்பெறுகின்றது.
க்ளீட்டஸ் – அப்படி என்றால், இன்றைய உணவு வகை புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டது என்று நினைக்கின்றேன்.
வாணி – ஆமாம். இதன் சீனப் பெயர் bo luo hui chi zhong. அடுத்து இந்த உணவு வகைக்குத் தேவையான பொருட்களை கூறுகின்றேன்.


கோழி இறகுகள் 10
அன்னாசிப்பழம் அரை கிலோ
கேரட் 1
காய்ந்த காளாண் 4
இஞ்சி 5 கிராம்
பூண்டு பல் 5
சமையல் மது 2 தேக்கரண்டி
சர்க்கரை 1 தேக்கரண்டி
உலர்ந்த தக்காளி மாவு 1 தேக்கரண்டி
சோயா சாஸ் ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் ஒரு தேக்கரண்டி
உப்பு ஒரு தேக்கரண்டி
மாவு கரைசல் 1 தேக்கரண்டி
எண்ணெய் சுமார் 150 மில்லி லிட்டர்


வாணி – முதலில், கோழி இறகுகளிலுள்ள எலும்புகள் அனைத்தையும் நீக்கவும். பிறகு அவற்றை சுத்தம் செய்து, எஞ்சிய நீரை நீக்கவும். அவற்றை சமையல் மது, சோயா சாஸ், சர்க்கரை, வெள்ளை மிளகு தூள், உப்பு, உலர்ந்த தக்காளி மாவு,ஆகியவற்றுடன் சேர்த்து 20 நிமிடம் அப்படியே வைக்கவும்.
க்ளீட்டஸ் – இந்த வேளையில், இஞ்சியை மெல்லிய அளவாகவும், பூண்டை துண்டு துண்டாகவும் நறுக்கி கொள்ளுங்கள். காய்ந்த காளாண்களை தண்ணீரில் சுமார் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, அவற்றை சுத்தம் செய்து, தனித்தனியாக 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணி – கேரட்டை சுத்தம் செய்து, அதன் தோலை நீக்கி, துண்டுத்துண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள். அன்னாசிப்பழத்தை சிறிய அளவாக வெட்டிக்கொள்ளுங்கள்.
க்ளீட்டஸ் – வாணலியை அடுப்பின் மீது வைத்து, அதிக சூட்டில் சமையல் எண்ணெயை இதில் ஊற்றவும்.
வாணி – முதலில், கோழி இறகுகளை வாணலியில் கொட்டி, வதக்கவும். பிறகு, மிதமான சூட்டில் மாற்றலாம். கோழி இறகுகள் பொன் நிறமாக மாறிய பின், அவற்றை வெளியே எடுக்கலாம்.

க்ளீட்டஸ் – இப்போது, வாணலியில் கொஞ்சம் எண்ணெயை விட்டுக்கொள்ளுங்கள். அதிக சூட்டில் முதலில் பூண்டு, இஞ்சி ஆகியவற்றை இதில் கொட்டி, வதக்கவும். மணம் வந்த பிறகு, காளாண், கேரட் ஆகியவற்றை இதில் கொட்டி, வதக்கவும். பிறகு, வாணலியில் சுமார் 100 மில்லி லிட்டர் தண்ணீரை ஊற்றவும். தொடர்ந்து வேகவையுங்கள்.
வாணி – 3 நிமிடங்களுக்குப் பின், அன்னாசிப்பழத் துண்டுகளையும், மாவு கரைசலையும் வாணலியில் சேர்க்கலாம். இறுதியில் கோழி இறகுகளை வாணலியில் கொட்டலாம். நன்றாக வேகவைக்கவும்.
க்ளீட்டஸ் – நேயர்களே, இன்றைய அன்னாசிப்பழம், கோழி இறகு ஆகியவை இடம்பெறும் உணவு வகை தயார்.
வாணி – சிறு குறிப்புகள். அன்னாசிப்பழத்தை துண்டுதுண்டாக நறுக்கி கொண்ட பிறகு, அவற்றை உப்பு சேர்ந்த தண்ணீரில் சுமார் ஒரு நிமிடம் ஊற வையுங்கள். இப்படி செய்தால், அன்னாசிப்பழத்தின் சுவை மேலும் அதிகரிக்கும்.
க்ளீட்டஸ் – தவிர, அன்னாசிப்பழத் துண்டுகளை நீண்ட நேரம் வேகவைக்கக் கூடாது. இல்லை என்றால், அதன் சுவை மேலும் புளிப்பாகி விடும்.