சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 8 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் மற்றும் ஆயர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் உத்தரவாதம் வழங்கப் பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள், திபெத் வேளாண் மற்றும் கால் நடை பிரதேசங்களின் குடி நீர் பாதுகாப்புப் பிரச்சினையை முழுவதுமாக தீர்க்க வேண்டும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நீர் சேமிப்புப் பணியகத்தின் தலைவர் பெய்மா வான்தெய் தெரிவித்தார்.
குடிநீர் பாதுகாப்பு பிரச்சினை அப்பிரதேசத்தில் வாழும் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வாழ்க்கை நிலையை கடுமையாக பாதித்து வருகின்றது. இதற்கென, 2006 முதல், 2010ம் ஆண்டு வரை, 12 இலட்சத்து 22 ஆயிரம் விவசாயிகள் மற்றும் ஆயர்களுக்கான குடி நீர் பாதுகாப்பு பிரச்சினையை திபெத் தன்னாட்சிப் பிரதேசம் முக்கியமாக தீர்க்கவுள்ளது.
திட்டப்படி, இவ்வாண்டு 3 இலட்சத்து 50 ஆயிரம் பேரின் குடி நீர் பாதுகாப்பு பிரச்சினையை திபெத் தீர்க்கும் என்று பெய்மா வான்தெய் கூறினார்.
|