2008ம் ஆண்டின் டிசம்பர் திங்கள் வரை, மார்ச் 14ம் நாள் லாசாவில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு 1கோடியே 47இலட்சத்து 40ஆயிரம் மதிப்புள்ள உதவித் தொகையை திபெத் அரசு வழங்கியுள்ளது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பொதுத் துறை ஆணையத்தின் தலைவர் Tenzin Drodra 13ம் நாள் இதை அறிவித்தார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வணிகர்கள் எதிர்நோக்குகின்ற அடிப்படை வாழ்க்கை பிரச்சினையை தீர்க்கும் வகையில், லாசா நகரில் மேற்கொள்ளப்படுகின்ற மிகவும் தாழ்ந்த வருமானமுடைய மக்களுக்கான உத்தரவாத வரையறைக்கு இணங்க, திபெத் பொதுத் துறை ஆணையம் அவர்களுக்கு உதவித் தொகையை வழங்கியது. 2008ம் ஆண்டின் மார்ச் திங்கள் முதல் 2010ம் ஆண்டின் பிப்ரவரி திங்கள் வரை, அவர்களுக்கான வாழ்க்கை உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும் என்று Tenzin Drodra கூறினார்.
|