• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-14 10:01:04    
குய்ஷோ கழுதை

cri
குய்ஷோ என்ற இடத்தில் ஒரு காலத்தில் கழுதைகளே கிடையாது. ஒரு முறை கழுதையை வினோதமாக பார்த்த குய்ஷோவைச் சேர்ந்த ஒருவன், ஒரு கழுதையை படகிலேற்றி குய்ஷோவுக்கு கொண்டு வந்தான். கழுதையை கொண்டு வந்தாயிற்று ஆனால் அதை எதற்கு பயன்படுத்துவது என்று தெரியவில்லை, அதனால் எந்தப் பயனும் பெற வழி தெரியாத அவன் அக்கழுதையை கொண்டு சென்று மலைப்பகுதியில் கட்டவிழ்த்து விட்டுவிட்டான். இதை கண்ட மலையை ஒட்டிய காட்டில் வாழ்ந்த புலி ஒன்று, இது வரை தான் பார்க்காத இந்த வினோதமான விலங்கு, பார்க்க வித்தியாசமாய், கொஞ்சம் மிரட்டலாய் தெரிந்ததும், அடடா, இது ஏதோ தெய்வ சக்தி கொண்டது போல என்று எண்ணியது. மறைந்திருந்து, பதுங்கி பதுங்கி கழுதையை பற்றி ஆய்வு செய்யத் தொடங்கியது புலி. பின் சற்றே அருகே சென்றது, ஆனால் ஒன்று கிடக்க ஒன்று ஆனால் என்ன செய்வது என்ற எண்ணத்தில், ஒரு குறிப்பிட்ட இடைவெளியை தக்கவைத்துக்கொண்டது.
ஒரு நாள் கழுதை தனது இனிமையான குரலால் கத்தியது. வித்தியாசமான கழுதையின் குரலைக் கேட்ட புலி, பயந்து நடுங்கி எங்கே நம்மை அடித்து தின்று விடப் போகிறது என்ற கிலியில் தலை தெறிக்க ஓடி ஒளிந்தது. பயத்தில் நடுங்கி ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பிய புலி, மனதை திடப்படுத்திக்கொண்டு, சரி கழுதை என்னதான் செய்கிறது என்று பார்ப்போம் என, கொஞ்சம் அருகே சென்று பார்த்தது. அட அப்படி ஒன்றும் பயப்படக்குடிய அளவில் அச்சுறுத்தல் வாய்ந்ததல்ல இந்த் அவிலங்கு என்று புலி எண்ணியது. நாட்கள் செல்ல செல்ல, கழுதையின் குரலுக்கு பழகிக்கொண்ட புலி, இன்னும் கொஞ்சம் அருகே சென்று பார்த்தது, ஆனால் அதை பாய்ந்து தாக்கும் எண்ணமேதும் அதற்கு தோன்றவில்லை. மேலும் நெருங்கிய புலி, கொஞ்சம் கொஞ்சமாக கழுதையிடம் தன்னிச்சையாக பழகத் தொடங்கியது. தள்ளி விடுவது, முட்டி மோதுவது, கொஞ்சம் முரட்டுத்தனமாக தட்டுவது என்று விளையாட்டாக புலி கழுதையை கிண்டிக்கொண்டிருக்க, கழுதை பொறுமையிழந்து தனது பின்னங்கால்களால் புலியை எட்டி உதைத்து. தூர விழுந்த புலிக்கு, அட, இவ்வளவுதான இதன் ஆற்றல். எட்டி உதைக்க மட்டும்தான் தெரியுமா இதற்கு என்று மகிழ்ச்சியடைந்தது. பின் கழுதையின் மீது பாய்ந்து கழுத்தை கடித்துக் கொன்று பசியாறியது.