• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-15 14:48:53    
ச்சி சான் மலை 2

cri

கி.பி.790ம் ஆண்டில், சாங் பாவ் கேள, சீனாவின் தாங் வம்சத்தின் படையில் சேர்ந்து, பல போர்களில் வெற்றி பெற்றார். பிறகு, அவர் ச்சி தேள தீவு சென்றடைந்து, இங்குள்ள தனிச்சிறப்பான நிலவியலைப் பயன்படுத்தி, சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கு இடையில் வர்த்தகம் மேற்கொண்டுள்ளார். இதனால், ச்சி தேள மக்கள் அவருக்கு நினைவு மண்டபத்தை நிறுவினர்.
கி.பி 843ம் ஆண்டில், ஜப்பானிய துறவி சீனாவிலிருந்து ஜப்பானுக்கு திரும்பிய வழியில், கடலில் கடுமையாக சீறி எழுந்த அலையைச் சந்திக்க வேண்டியதாயிற்று. உடனே, படகில் வேலை செய்தவர்கள் அனைவரும் மிங் கடவுளுக்கு வழிபாடு செய்து, உதவியளிக்க வேண்டிக்கொண்டனர். மிங் கடவுள் கடளை வாளை அனுப்பியவுடன், கடல் அமைதியாயிற்று. இதனால், அந்த ஜப்பானிய மத பிரதிநிதி

குழு பாதுகாப்பாக ஜப்பானுக்குச் சென்றடைந்தது. பிறகு தான், ஜப்பானில் ச்சி சான் கோயில் கட்டியமைக்கப்பட்டு, ச்சி சானின் மிங் கடவுளுக்கு அங்கு வழிபாடு தொடங்கப்பட்டது.
புத்த மத காட்சி தலங்களைத் தவிர, ச்சி சான்னில், சான்தூங் மாநிலத்தின் பாணியுடைய நாட்டுப்புற பண்பாட்டு அருங்காட்சியகம் உள்ளது. அதில், 6 காட்சி மண்டலங்கள் இடம்பெறுகின்றன. பொருட்கள், நிழற்படங்கள், சிலைகள் ஆகியவற்றின் மூலம், பண்டைகாலத்தில், இப்பிரதேசத்தில் வசித்த மக்களின் வாழ்க்கையும், மீனவர் குடும்பங்களின் தனிச்சிறப்பான வாழ்க்கையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் வலருகின்ற சிறப்பான கடல்புற்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வீடுகளை, வழிக்காட்டி சாங் தான் அறிமுகப்படுத்தினார்.
கடற்புற்களால் அமைக்கப்பட்ட வீடு நிதானமாக உள்ளது. அதனை நூறு ஆண்டுகள் பயன்படுத்தலாம். இந்த வகை கடற்புல், 5 மீட்டர் முதல் 10 மீட்டர் ஆழமான கடலடியில் வளர்கின்றது என்றார் அவர்.
சமூகத்தின் வளர்ச்சியுடன், சியேள துங் தீபகற்பத்தில் சிலர் கடற்புற்களால் செய்யப்பட்ட வீட்டில் வாழ்கின்றனர். உள்ளூர் பயன்பாட்டு பாணிகளைப் பயணிகளுக்கு வெளிப்படுத்தும் வகையில், இந்த நாட்டுப்புற பண்பாட்டு

அருங்காட்சியகம், உண்மையான கடற்புற்களால் செய்யப்பட்ட வீட்டின் மாதிரியைத் தயாரித்து வைத்துள்ளது. திருமணம் உள்ளிட்ட பல்வேறு அன்றாட வாழ்க்கை அம்சங்களைப் பிரதிபலிக்கும் பொருட்களும், இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இப்போது, ச்சி சான் மலை மேன்மேலும் பல சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றது. இங்கு வெப்ப மண்டல பிரதேசத்தின் காற்றும் வாநிலையும் நிலவுகின்றன. ஆண்டின் சராசரி வாநிலை பதிவு 11 டிகிரியாகும். வசந்தகாலத்தில் இங்கு பயணம் மேற்கொண்டால், நூற்றுக்கு அதிகமான மலர் வகைகளைப் பார்க்கலாம். கோடைக்காலத்தில் கடலில் எழும் அலையைப் பார்த்து இதமான உணர்வு கொள்ளலாம்.