

Ha erbin நகர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலா மேற்கொள்ள விரும்பும் நகராகும். இன்றைய Ha erbin நகரில் கோடைகாலத்திலும் இலையுதிர் காலத்திலும் காணப்படும் அழகிய இயற்கைக் காட்சிகள் பயணிகளை ஈர்த்துள்ளன. குறிப்பாக, குளிர்காலத்தில் பனியைப் பார்க்க, பயணிகள் Ha erbin நகருக்குச் சென்றனர்.

2002ம் ஆண்டில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பயணிகளும் 2003ம் ஆண்டில், சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பயணிகளும் வருகை தந்தனர் என்று Ha erbin நகர சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கூறினார். உறைபனி சுற்றுலாவினால், உறைபனி சறுக்கல் மைதான நிர்வாகிகள் பயன் பெற்றிருக்கின்றனர். நாள்தோறும் 600க்கும் அதிகமானோரை வரவேற்கின்றோம். அவர்களில் பலர், குடும்பத்தினருடன் சுற்றுலா மேற்கொள்கின்றனர். பனிச்சறுக்கு, உறைபனி சறுக்கு ஆகிய விளையாட்டு நிகழ்ச்சிகள் முதியோருக்கும் குழந்தைகளுக்கும் பொருத்தமானவை. விளையாட்டுச் சாதனங்கள் தரமானவை. வசதியானவை.

|