• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-16 10:25:29    
குதிரை நடனப் போட்டி திடல் வீராங்கனை Liu Li Na 1

cri
"ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் குதிரையேற்றக் கலை போட்டியில் கலந்து கொண்ட Liu Li Na பற்றி" கூறுகின்றோம்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் குதிரை நடனப் போட்டி திடலில், சீனாவின் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஷிய இன மங்கை Liu Li Na காணப்பட்டார்.
சீனக் குதிரையேற்றக்கலை அணியில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியை பெற்ற முதலாவது நபர் Liu Li Naவே ஆவார்.
Liu Li Na பெற்ற இச்சாதனை, கடந்த பத்துக்கு அதிகமான ஆண்டுகளில், குதிரையேற்றக் கலை லட்சியம் மீதான தமது பற்று, இதற்கு தாம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் ஆகியவற்றிலிருந்து பிரிக்கப்பட முடியாதது.

1994ஆம் ஆண்டு, 14 வயதான Liu Li Na, சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் உள்ள விளையாட்டுப் பள்ளியில் தடகள அணியின் ஈட்டியெறிதல் வீராங்கணையாக இருந்தார். அப்போதைய சிங்கியாங் குதிரையேற்றக் கலை அணியின் துணைத் தலைவர் Ban Zhi Qiang, வீரர்களைத் தெரிவு செய்ய, இவ்விளையாட்டு பள்ளிக்கு வந்தார். அவர் Liu Li Naஐச் சந்தித்ததும், அவரைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தார். குதிரை ஏற்றப் போட்டி மீதான பற்றினால், குதிரையேற்றக்கலை விளையாட்டின் பாதையில் Liu Li Na நடைபோடத் துவங்கினார். Liu Li Na கூறியதாவது:
"குருவி வால் கோட்டும் மற்றும் வெண்ணிற மேலாடையும் அணிவது, மிக அழகானது என்று நினைகின்றேன். குதிரையும் அழகானது. குதிரை நடந்து உலாவி திரியும் வண்ணம் மிகவும் அழகானது"என்றார், அவர்.

குதிரையை அவர் மிகவும் விரும்பினாலும், துவக்கத்தில், உயரமான குதிரையின் முன் நின்று, அதன் மீது அவர் துணிந்து ஏறவில்லை. குதிரையேற்றக் கலை அணியில் சேர்ந்த சில நாட்களுக்கு பின், அவர் சில சக மாணவர்களுடன் கிர்கிஸ்தானுக்கு அனுப்பப்பட்டார். அவரது குதிரையேற்றக் கலை பயிற்சி வாழ்க்கை அப்போதுதான் துவங்கியது.
கிர்கிஸ்தானில், பயிற்சியாளர் குழுவின் ஏற்பாட்டின் படி, அவர் அதிக பயிற்சிகளை செய்ய வேண்டியிருந்தது. குதிரையில் ஏறுவது, அமர்வது உள்ளிட்ட அனைத்து செயல்களையும் அவர் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்ய வேண்டும். குதிரை நடந்து செல்லும் தாளத்துக்கு பழகும் பொருட்டு, வீரர்கள் குதிரையின் மேல் நீண்டகாலமாக அமர வேண்டியிருந்தது. அரை மணிக்கு ஒரு முறை குதிரையை மாற்ற வேண்டும்.

2002ஆம் ஆண்டு, Liu Li Na டென்மார்க் நாட்டுக்கு சென்றார். இந்நாட்டில் பயிற்சி செய்த போது, அதிக நேரங்களில், அவர் குதிரைகளுடன் இருந்தார். காலை 7 மணியளவில் அவர் படுக்கையை விட்டு எழுந்த பின், லாயத்தைத் துப்புரவு செய்து, குதிரைகளைத் தேய்த்து கழுவி, ஆயத்தம் செய்வதற்கு, சுமார் ஒரு மணி நேரம் தேவைப்பட்டது. நாள்தோறும் குதிரையின் மேல் அமர்ந்து, குறைந்தது 10 மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் பயிற்சி முடிந்த பின், அவர் குதிரையை கழுவ வேண்டும். இரவில் தான் அவர் தங்கும் விடுதிக்கு திரும்பினார். இத்தகைய வாழ்க்கை சில ஆண்டுகளாக தொடர்ந்தது.
2003ஆம் ஆண்டு, சர்வதேச அளவிலான போட்டியில் அவர் முதன்முறையாக கலந்து கொண்டார். Athens ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற அவர் பாடுபட்டார்.