• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-16 10:29:43    
சர்வதேச முதல் நிலை விளையாட்டுப் போட்டிகளுக்கும் சீனாவுக்குமிடையிலான நெருங்கிய தொடர்பு

cri
உலக Formula 1 கார் பந்தயம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஆடவர் உலகக் கோப்பை கால்பந்து ஆகியவை உலகில் முக்கிய 3 விளையாட்டுப் போட்டிகளாகும் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. இது வரை, அவை 50 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொள்கின்றன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பரவலான ரசிகர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் உள்ளனர். உலக Formula 1 கார் பந்தயத்துக்கு 180க்கு அதிகமான நாடுகள் தொலைக்காட்சி ஒளிபரப்பை

மேற்கொண்டு வருகின்றன. இதில் 30 கோடிக்கு அதிகமான பார்வையாளர்கள் உள்ளனர். 2004ம் ஆண்டு, சீனாவின் ஷாங்காய் மாநகரம் இப்போட்டியை நடத்த துவங்கியது. ஷாங்காய் மாநகருக்கு சீரான சர்வதேச புகழை இது வழங்கியுள்ளது. சீனாவின் விளையாட்டு தொழிற்துறையில், உலக Formula 1 கார் பந்தயம் முக்கியத்துவம் வாய்ந்தது.
உலக Formula 1 கார் பந்தயம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. இது வரை, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் உலக Formula 1 கார் பந்தயமும் டென்னிஸ் மாஸ்டர் கோப்பையும் வணிக நிலை மற்றும் சர்வதேச புகழில் ஒரளவுக்கு உயர்வானவையாகும். அத்துடன், இரு போட்டிகளை பற்றி நாம் அதிகம் அறிந்துவைத்துள்ளோம். சீன விளையாட்டுத் தொழிற்துறையின்

வளர்ச்சியை தூண்டுவதற்கு இது வரலாற்று கடப்பாட்டையும் கடமையையும் கொண்டு வருகின்றது என்றார் அவர்.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், 2008ம் ஆண்டுக்கான உலக Formula 1 கார் பந்தயத்தின் சீனப் போட்டி, ஷாங்காய் டென்னிஸ் மாஸ்டர் கோப்பை போட்டி உள்ளிட்ட பல உலக முதல் நிலை விளையாட்டுப் போட்டிகள் சீனச் சந்தையில் நுழைந்தன. சீன மக்களின் விளையாட்டு உற்சாகத்தை இது மேலும் தீவிரமாக்கியுள்ளது. சீனா உலக முதல் நிலை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று Jiang Lan கூறினார்.

முதலாவதாக, சீன மக்கள் விளையாட்டு பணியில் கவனம் செலுத்துவது என்பது முக்கியமானது. ஏனென்றால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மக்களின் ஆர்வத்தையும் அக்கறையையும் தீவிரமாக்கியுள்ளது. இரண்டாவதாக, விளையாட்டு சந்தையின் ஈர்ப்பு ஆற்றலையும் சிறப்பான பங்கையும் பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. எனவே, சீனாவில் சர்வதேச முதல் நிலை விளையாட்டுப் போட்டிகளின் வளர்ச்சிக்கு சீரான வாய்ப்பை இது வழங்கும் என்றார் அவர்.