• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-16 16:59:22    
திபெத்தில் செய்தி அறிவிப்பு மேற்கொண்ட வெளிநாட்டுச் செய்தியாளர்கள்

cri

9வது திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் பேரவையின் 2வது கூட்டமும் 9வது திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 2வது கூட்டமும் அண்மையில் லாசா நகரில் நடைபெற்றன. சீனாவுக்கு அருகிலுள்ள பல நாடுகளின் செய்தி ஊடகங்கள் இருக் கூட்டங்களுக்கான செய்திச்சேகரிப்பில் முதன்முறையாக கலந்து கொண்டன. திபெத்தின் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் பெறப்பட்ட சாதனைகளில் வெளிநாட்டு செய்தியாளர் பலர் வியப்படைந்தனர்.

இந்திய செய்தியாளர் ஒருவர்

hindustan times செய்தி ஏடு, NDTV தொலைக்காட்சி, The Rising நேபாள எனும் செய்தி ஏடு, நேபாள தேசிய தொலைக்காட்சி நிலையம் ஆகிய 4 வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் இவ்வாண்டில் நடைபெற்ற இரு கூட்டங்களுக்கான பேட்டிகளில் கலந்து கொண்டன.

சில நாட்கள் பேட்டிகளின் மூலம் திபெத்தின் புதிய நிலைமை தங்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளது என்றும் திபெத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்க்கையின் மேம்பாடு ஆகியவை தாங்கள் கற்பனை செய்திருக்கவில்லை ென்றும் சில வெளிநாட்டு செய்தியாளர்கள் கூறினர். திபெத்தின் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் பெறப்பட்ட சாதனைகளில் அவர்கள் வியப்பை வெளிப்படுத்தினர்.

தவிர, இந்த வெளிநாட்டுச் செய்தியாளர்கள் இரு கூட்டங்களில் கலந்து கொண்ட பல பிரதிநிதிகளையும் உறுப்பினர்களையும் பேட்டி கண்டு, திபெத்தின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களையும் மக்களின் வாழக்கையை மேம்படுத்தும் திட்டப்பணிகளையும் பார்வையிட்டனர்.