 திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 9வது மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரில், ஆண்டுதோறும் மார்ச் 28ம் நாளை, திபெத் அடிமைகளின் விடுதலை நாளாக நிறுவும் தீர்மானம் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
திபெத் அடிமைகளின் விடுதலை நாளை நிறுவுவது பற்றிய திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் பேரவையின் தீர்மானத்தை, கூட்டத்தொடரில் கலந்து கொண்ட 382 பிரதிநிதிகள், வாக்கெடுப்பில் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.

கடந்த 50 ஆண்டுகளில், திபெத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு முதலிய பல்வேறு துறைகளில், தலைகீழான மாற்றம் ஏற்பட்டுள்ளது. மிகப் பரந்துபட்ட மக்கள், புதிய திபெத்தின் தலைவர்களாக மாறியுள்ளனர். ஆனால், பிரிவினைவாதக் குழுவினர்கள், பிளவு நடவடிக்கைகளை இடைவிடாமல் மேற்கொண்டு, திபெத்தின் வளர்ச்சியைத் தடுத்துள்ளனர். அதனால், திபெத்தின் அடிமைகளின் விடுதலை நாளை நிறுவி, நாட்டுப்பற்று மற்றும் திபெத்தை நேசிக்கும் உணர்வை மேலும் அதிகரிக்க வேண்டும். திபெத்தில் பல்வேறு தேசிய இனங்களின் மக்களை, 50 ஆண்டுகாலத்துக்கு முந்தைய திபெத் ஜனநாயகச் சீர்திருத்தம் என்ற வரலாற்று நிகழ்ச்சியை எப்போதும் நினைவு கூறச் செய்து, இன்றைய இன்பமான வாழ்க்கையை பேணிமதிக்கச் செய்ய வேண்டும் என்று மிகப் பல மக்கள் விரும்புகின்றனர்.
|