• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-19 19:41:12    
தொல் பொருட்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள்

cri
2008ம் ஆண்டு, இடைக்கால மற்றும் நீண்ட கால பாதுகாப்புப் பயன்பாட்டு வளர்ச்சித் திட்டங்களை பெய்ஜிங் மாநகரம் துவக்கியது. இதற்கு முந்தைய 8 ஆண்டுகாலத்தில், சீரமைக்கப்பட வேண்டியிருந்த தொல் பொருட்கள் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. அடுத்த 8 ஆண்டுகளில், தொல் பொருட்களுக்கான அன்றாட பராமரிப்பு மற்றும் செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெய்ஜிங் மாநகரின் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் மாசுபாட்டின் கட்டுப்பாடு, பண்டைக்கால நகரின் தோற்றத்தை மீட்கும் பணியோடு, இடைக்கால மற்றும் நீண்ட கால மறுசீரமைப்புப் பணியை நடைமுறைப்படுத்தி, பெய்ஜிங் மாநகரின் முந்தைய தோற்றத்தை சிறப்புடன் எடுத்துக்காட்ட வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கமாகுமென பெய்ஜிங் மாநகரின் தொல் பொருள் ஆணையத்தின் தலைவர் kongfanzhi தெரிவித்தார்.

திட்டப்படி, 2008ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும், 15 கோடி யுவானை ஒதுக்கி, பெய்ஜிங் மாநகரின் தொல் பொருட்களுக்கான பாதுகாப்பு, தொடர்புடைய சூழல், அன்றாட பராமரிப்பு மற்றும் செப்பனிடுதல் முதலிய நடவடிக்கைகளை இம்மாநகரம் மேற்கொண்டு வருகிறது. 2008ம் ஆண்டு, பெய்ஜிங் மாநகரின் இடைக்கால மற்றும் நீண்ட கால பாதுகாப்புப் பயன்பாட்டு வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதலாவது ஆண்டாகும். தொல் பொருட்களை பாதுகாத்து மறுசீரமைக்கின்ற 31 திட்டப்பணிகளை, பெய்ஜிங் தொல் பொருள் ஆணையம் மேற்கொண்டது. வரலாற்று பண்பாட்டு மரபுச் செல்வங்களான சீனப் பெருஞ்சுவரின் badaling பகுதி, அரண்மனை அருங்காட்சியகம், தியென் ஆன் மன் jinshui பாலத்தின் மேற்பரப்பு, xishiku கத்தோலிக்க தேவாலயம் போன்றவற்றின் பராமரிப்புத் திட்டப்பணிகள் இதில் அடங்குகின்றன.

நண்பர்களே, தொல் பொருட்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் என்ற தகவலை அறிந்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.