நிதி நெருக்கடியின் பாதிப்பால், 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்துகொள்வது பற்றி அமெரிக்கா இது வரை முடிவு செய்யவில்லை. Barrack Obama அமெரிக்க அரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்றவுடன், அமெரிக்கா இப்பொருட்காட்சியில் கலந்துகொள்வதை முன்னகர்த்தலாம் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் நிர்வாகிகள் பொதுவாகக் கருத்து தெரிவித்தனர். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் ஒருங்கிணைப்பு ஆணையகத்தின் துணைத் தலைவர் Zhou Hanmin 19ம் நாள் ஷாங்காய் மாநகரில் பேட்டி அளித்த போது, இவ்வாறு கூறினார்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் ஒருங்கிணைப்புக் குழுவும் அமெரிக்காவின் தொடர்புடைய தரப்புகளும் நெருங்கிய பரிமாற்றத்தை நிலைநிறுத்தி வருகின்றன என்று Zhou Hanmin கூறினார். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் அமெரிக்கா கலந்துகொள்வது, இப்பொருட்காட்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்கும், சீன-அமெரிக்க உறவின் நீண்டகால வளர்ச்சி, முழு உலக மற்றும் பிரதேச ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் கூறினார்.
|