• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-19 19:53:13    
சர்வதேச தடகள கூட்டமைப்பின் தரவரிசை

cri

சர்வதேச தடகள கூட்டமைப்பு 2009ம் ஆண்டு புதிய உலக தரவரிசையை வெளியிட்டுள்ளது. 110 மீட்டர் ஆடவர் தடைதாண்டும் ஓட்டப்போட்டியில், புகழ் பெற்ற கியூபா வீரர் Dayron Robles முதலிடத்தைப் பெற்றார். புகழ் பெற்ற சீன வீரர் Liu Xiang 17வது இடம் பெற்றார்.

சர்வதேச குறுகியப் பாதை பனிச்சறுக்கல் சாம்பியன் பட்ட போட்டி 18 ஆம் நாள் மாஸ்கோவில் முடிவடைந்தது. சீன வீராங்கனை Wang Beixing மகளிர் குறுகியப் பாதை பனிச்சறுக்கல் கலப்புப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். இந்த கலப்புப் போட்டியில் 1000 மீட்டர் போட்டிகள் இரண்டும், 500 மீட்டர் போட்டிகள் இரண்டும் நடைபெற்றன.

17 மற்றும் 18 ஆம் நாட்களில் 1000 மீட்டர் பனி சறுக்கல் போட்டிகள் இரண்டும் நடைபெற்றன. 17 ஆம் நாளைய போட்டியில் சீன வீராங்கனை Wang Beixing ஒரு நிமிடம் 16.53 வினாடிகளில் 3வது இடத்தை பெற்றார். 18 ஆம் நாள் போட்டியில் ஒரு நிமிடம் 16.40 வினாடிகளில் 2வது இடத்தையும் பெற்றார். 500 மீட்டர் பனி சறுக்கல் இரண்டுப் போட்டிகளில் 38.10 வினாடிகள் மற்றும் 37.91 வினாடிகள் என்ற பதிவுகளில் இரண்டு முறையும் இரண்டாவது இடத்தையே பெற்றார். இவ்வாறு மகளிர் குறுகியப் பாதை பனிச்சறுக்கல் கலப்பு விளையாட்டுப் போட்டியின் தங்கப் பதக்கத்தை Wang Beixing வென்றார்.

சர்வதேச மேசைப்பந்து கூட்டமைப்பின் அனவைரும் பங்கெடுக்கும் ஸ்லோவேனிய போட்டி 18ம் நாள் முடிவடைந்தது. சீனாவின் இளம் வீரர்கள் ஆடவர் மேசை பந்து ஒற்றையர், இரட்டையர் போட்டிகளிலும், மகளிர் மேசை பந்து ஒற்றையர், இரட்டையர் போட்டிகளிலும் சாம்பியன் பட்டங்களை வென்றனர்.