• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-20 14:36:58    
ச்சோ ச்சேங் யுவான் தோட்டம்

cri

ச்சோ ச்சேங் யுவான் தோட்டம், சூ ச்சோ நகரின் லோ மென் நெய்யில் உள்ளது. அது, சூ ச்சோவின் மிகப் பெரிய தோட்டமாகும். சூ ச்சோவின் பழங்காலத் தோட்டங்களின் பிரதிநிதியுமாகும். அது, மிங் வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்டது. தற்போது இங்கு காணப்படும் பெரும்பாலான கட்டிடங்கள், ச்சிங் வம்சக்காலத்தின் இறுதியில் கட்டியமைக்கப்பட்டன.

இத்தோட்டத்தின் பரப்பளவு, சுமார் 4.1 ஹெக்டராகும். இங்குள்ள முக்கிய கட்டிடங்களில், சியுயே சியாங் யுன் வேய் மற்றும் தை ஷுவாங் விதான மண்டபங்கள், தியோ திங் கே மாளிகை, யுவான் சியாங், shibamantuoluo பூங்கா மற்றும் sanshiliuyuanyang மண்டபங்கள் முதலியவை இடம்பெறுகின்றன.

அது, கிழக்கு, மத்தி, மேற்கு, குடியிருப்புப் பிரதேசம் ஆகிய 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. குடியிருப்புப் பிரதேசத்தில், சூ ச்சோ நகரின் மக்கள் குடியிருக்கும் வீடுகளைப் போன்றே காணப்படும் வீடுகள் இடம்பெறுகின்றன. தற்போது, இப்பிரதேசம், தோட்ட அருங்காட்சியகத்தின் கண்காட்சிப் பிரதேசமாக மாறியுள்ளது.

மத்தியப் பகுதி, இத்தோட்டத்தின் முக்கியப் பிரதேசமாகும். அதன் பரப்பளவு, சுமார் 1.2 ஹெக்டராகும். அது, குளத்தை மையமாக கொள்கிறது. குளத்தின் பரப்பளவு, மொத்த பரப்பளவின் ஐந்தில் மூன்று பங்காகும். யுவான் சியாங் மண்டபம், மத்தியப் பகுதியின் முக்கிய கட்டிடமாகும். அது, குளத்தின் தென் பகுதியில் உள்ளது.

தோட்டத்தின் மேற்குப் பகுதியின் பரப்பளவு, சுமார் 0.8 ஹெக்டராகும். sanshiliuyuanyang மண்டபம், இப்பகுதியின் முக்கிய கட்டிடமாகும். இது, முன்பு, இத்தோட்டத்தின் உரிமையாளர் விருந்தினர்களுக்கு விருந்தளித்து, பாடல்களைக் கேட்கும் இடமாக இருந்தது. வெயில் நாட்களில், நீல நிறமான ஜன்னல் கண்ணாடி மூலம், வெளியிலுள்ள காட்சிகளைப் பார்க்கும் போது, அந்த காட்சி பனிக் காட்சி போல் காணப்படலாம்.

கிழக்குப் பகுதியின் பரப்பளவு, சுமார் 2 ஹெக்டராகும்.

இத்தோட்டம், சீனாவின் நான்கு புகழ்பெற்ற தோட்டங்களில் முதலிடம் வகிக்கிறது. அத்துடன், இது, சீனாவில் முக்கிய தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவும், உலகப் பண்பாட்டு மரபு செல்வமுமாக அமைகிறது.