புத்தாண்டின்போது இளவரசனுக்கு ஒரு புறாவை அன்பளிப்பாக தருவது ஹாந்தான் எனுமிடத்தின் ஒரு பரவலான வழக்கம். இளவரசனுக்கும் இப்படி புறாக்கள் அன்பளிப்பாக தரப்பட்டால் மிக்க மகிழ்ச்சி. புறாவை அன்பளிப்பாக கொடுப்பவர்களுக்கு நிறைய பரிசுகளும், வெகுமதிகளும் தந்தனுப்புவான் இந்த இளவரசன். ஆக, புத்தாண்டு நாளில் இளவரசனை காண புறாக்களுடன் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருந்தது. ஒருமுறை இந்த இளவரசனிடம் ஒருவர், ஏன் இந்த புறாவை அன்பளிப்பாக பெறும் வழமை, இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்று கேட்டார். இளவரசனும் அமைதியாக, புத்தாண்டு நாளில் புறாக்கலை சுதந்திரமாக வானில் பறக்க விடுவிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இது என் இரக்க குணத்தை எண்பிக்கும் என்றான். அதற்கு அந்த நபர், இளவரசனே, உன்னுடைய மக்களுக்கு நீ புறாக்களை வாங்கி அவற்றை வான்பில் பறக்கவிட்டுவிடுவாய் என்பது நன்றாகவே தெரியும். எனவே அவர்கள் உன் கையில் புறாக்களை அன்பளிப்பாக தருவதற்காக, புறா வேட்டைக்கு கிளம்பிவிடுகின்றனர். புறாக்களை பிடித்து உன்னிடம் ஒப்படைக்கும் எண்ணத்தில் அவர்கள் செயல்பட்டாலும், இந்த முயற்சியில் பல புறாக்கள் கொல்லப்படுவதே உண்மை. புறக்களை காப்பாற்றவேண்டும், அவற்றை சுதந்திரமாய் பறக்க விடவேண்டும் என்று நீ நினைத்தால், புறாக்களை பிடிப்பதை முதலில் தடை செய். இதனால் மக்கள் புறா வேட்டைக்கு புரப்பட்டு அவற்றுக்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தமாட்டார்கள். இப்போதுள்ள படி பார்த்தால், நீ புறாக்களை விடுவிப்பதற்காக அவற்றை பிடிக்கிராய், உன்னுடைய இரக்க குணத்தால் புறாக்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யமுடியாது என்றார். இளவரசனுக்கு தான் இரக்க குணம் என்று நம்பியதன் பின்னணியிலுள்ள தீங்கு புரிந்தது. மற்றவர் சொன்ன விளக்கத்தின் உண்மை உணர்ந்து புறாக்களை அன்பளிப்பாக பெறுவதை நிறுத்தியதோடு, புறாக்களை பிடிப்பதையும் தடை செய்து அறிவித்தான் இளவரசன்.
|