• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-21 15:38:39    
2009ம் ஆண்டு தக்கார் வாகன தொடரோட்ட போட்டி

cri
2009ம் ஆண்டு தக்கார் வாகன தொடரோட்ட போட்டி உள்ளூர் நேரப்படி 17ம் நாள்,முடிவடைந்தது. தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் மற்றும் ஸ்பானிய வீரர் மார்க் கோமா, வாகன பிரிவு மற்றும் மோட்டர் பிரிவின் சாம்பியன் பட்டங்களை பெற்றனர்.
நடப்பு தக்கார் வாகன தொடரோட்ட போட்டி, ஜனவரி 3ம் நாள் அர்ஜென்டீன தலைநகர் புய்னோஸ் அரேஸில் துவங்கியது. இதன் நீளம் 9000 கிலோமீட்டராகும்.
சீன தேசிய விளையாட்டு ஆணையம் 19ம் நாள் நன் யுங்கை சீன கால்பந்து சம்மேளனத்தின் தலைவரா நியமித்தது. சியே யா லுங்குக்கு பதிலாக நன் யுங் நியமிக்கப்பட்டு இருக்கின்றார். கடந்த ஆண்டில், சீன ஆடவர் கால்பந்து அணி, 2010ம்

ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பையின் தேர்வு போட்டியில் தோல்வியடைந்ததால், சியே யா லுங் செய்தி ஊடகங்களிடமிருந்து எழுந்த நிர்ப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு பதவி விலகினார்.
3 நாள் நீடித்த உலக கோப்பைமிதி வண்டி போட்டி பெய்ஜிங்கில் 18ம் நாளிரவு முடிவடைந்தது. உபசரிப்பு அணியான சீன அணி, இப்போட்டியில் 5 வெள்ளிப்பதக்கங்களையும் 1 வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது.
2008 முதல் 2009ம் ஆண்டு வரை சீன கூடைப்பந்து அணிகளுக்கிடையிலான தொடர்ப்போட்டி 18ம் நாள் தொடர்ந்து நடைபெற்றது. கடந்த முறை சாம்பியன் பட்டம் பெற்ற குவாங் துங் அணி, 105-90 என்ற புள்ளிகணக்கில் சன் துங் அணியை தோற்கடித்தது. கடந்த 10 ஆட்டங்களில் இது தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது.

2008 முதல் 2009ம் ஆண்டு வரை ஸ்பானிய கால்பந்து அணிகளுக்கிடையிலான தொடர்போட்டியின் 19வது சுற்றுப்போட்டி, 18ம் நாள் தொடர்ந்து நடைபெற்றது. உபசரிப்பு அணியான ரியல் மெட்ரி அணி, 3-1 என்ற கோல் கணக்கில், ஓசாசுன அணியை தோற்கடித்தது. இது கடந்த 4 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெறு வருகிறது.
புதிய நூற்றாண்டின் மிகச் சிறந்த பந்துக்காப்பாளர் தரவரிசையை சர்வதேச கால்பந்து மற்றும் வரலாற்று புள்ளிவிபரச் சங்கம் 20ம் நாள் வெளியிட்டன. இத்தாலிய ஜுவன்துஸ் அணியின் பந்துகாப்பாளர் புஃபோன், 78 புள்ளிகளை கொண்டு, முதலிடத்தை பிடித்தார். முன்னாள் மான்செஸ்டர் யுனைடட் அணியின் பந்துக்காப்பாளர் பீட்டர் ஸ்மெய்ச்சல், 2வது இடத்தை வகித்தார்.

21ம் நாள் சீனாவில், சீன அணியுடன் நடைபெறும் 2011ம் ஆண்டு ஆசிய கோப்பையின் தேர்வுப் போட்டியில் வியட்நாம் அணி, முற்றுகையிட்டு விளையாடும் உத்தியை மேற்கொள்ளும் என்று அதன் பயிற்சியாளர் காலிஸ்டோ 18ம் நாள் ஹனோய் நகரில் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ள சீன அணி, அடுத்த சுற்றுப் போட்டியில் நுழைய, வியட்நாம் அணியை தோற்கடிக்க வேண்டும். எனவே வியட்நாம் அணியோடு நடைபெறும் இப்போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று காலிஸ்டோ தெரிவித்தார்.